கதகளியில் இரண்டாம் பாதியில் பாடல்களே இல்லாமல் விறுவிறுப்பாக அமைந்துள்ளது – விஷால்!

Bookmark and Share

கதகளியில் இரண்டாம் பாதியில் பாடல்களே இல்லாமல் விறுவிறுப்பாக அமைந்துள்ளது – விஷால்!

கதகளி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் நாயகன் விஷால், இயக்குநர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி, நடிகர் கர்னாஸ், மைம் கோபி , ஆத்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கதகளி பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் பேசியது , எல்லோரும் என்னிடம் இந்த படத்துக்கு ஏன் கதகளி என்று தலைப்பு வைத்தீர்கள் என்று கேட்கின்றனர் ?? நாங்கள் கதகளி என்னும் தலைப்பு தமிழ் தான் என்று தெரிந்த பின்னர் தான் படத்துக்கு கதகளி என்று பெயர் வைத்தோம்.

நான் முதன் முறையாக இயக்குநர் பாண்டிராஜ் உடன் இனைந்து பணியாற்றுகிறேன். இது மிகவும் சிறப்பான கதை. 

என்னுடைய படங்களில் இரண்டாம் பாதியில் பாடல்கள் இல்லாமல் வருவது இது தான் முதல் முறை. படத்தில் இடம் பெரும் சண்டை காட்சிகள் அனைத்துக்கும் ஒரு காரணமும், லீடும் நிச்சயம் இருக்கும். படத்தில் மொபைல் போனுக்கு முக்கிய பங்கு உண்டு. படத்துக்கு இசையமைப்பாளர் ஆதி மிகச்சிறப்பாக இசையமைத்துள்ளார்.  

படத்தில் அவருடைய பின்னணி இசை பெரிதும் பேசப்படும் விஷயமாக இருக்கும். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் அவர்கள் மிகச்சிறப்பாக படத்தை படம்பிடித்துள்ளார். கேத்ரீன் தெரேசா அவர்களின் நடிப்பு நிச்சயம் பேசப்படும். என்னை பொறுத்தவரை பொங்கலுக்கு வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டும், நான் அனைவருக்காகவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன், என்னுடைய படத்துக்காக இன்னும் அதிகமாக வேண்டி கொள்கிறேன் என்றார் நாயகன் விஷால்.

 


Post your comment





Related News
ஆந்திர ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள கதகளி!
ஜனவரி 22-ல் மீண்டும் கதகளி ஆட வரும் விஷால்!
நாளை 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் விஷாலின் கதகளி!
விஷாலின் கதகளி ரன்னிங் டைம் வெளியானது!
இன்னும் 2 தினங்களில் கதகளி ஆடவரும் விஷால்!
விஷால் வருகையை எதிர்பார்க்கும் பாண்டிராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions