கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்

Bookmark and Share

கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்

பிராஷாந்த் நீள் இயக்கத்தில் கன்னடத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் கே.ஜி.எஃப். ராக்கிங் ஸ்டார் யாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக அறிமுகமாகிறார். வசிஸ்டா என்.சிம்ஹா, ரம்யா கிருஷ்ணன், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாகுபலி, 2.0 படங்களுக்கு பிறகு கே.ஜி.எஃப் படமும் இந்திய அளவில் பேசப்படும் படமாக இருக்கும் என்றும், கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் படக்குழுவினர் மற்றும் திரையுலகினர் பங்கேற்றனர்.

கன்னடத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. தமிழில் இந்த படத்தை நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தின் தமிழ் பதிப்பின் டிரைலரை வெளியிட்ட விஷால் பேசும் போது,

இந்த படத்தின் மூலம் கன்னட சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மாதிரியான ஒரு படத்தில் தானும் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறேன். 

1951-ல் நடந்த இந்த கதை தங்கச் சுரங்கத்தை கண்டுபிடிப்பதை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. மும்பையில் வளரும் யாஷ், தங்கச் சுரங்கத்திற்குள் சென்று அங்கு அடிமையாய் இருக்கும் மக்களை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஹோம்பேல் பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படம் ரூ.80 கோடியில் உருவாகி இருக்கிறது. படத்தை வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions