விஷால் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னை ஜெயிக்க வைத்துவிடுவார். குஷ்பு

Bookmark and Share

விஷால் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னை ஜெயிக்க வைத்துவிடுவார். குஷ்பு

தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் விஷால் திடீரென நடிகை குஷ்புவை வேட்பாளராக அறிவித்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தலின்போது பம்பரமாக சுழன்று ஓட்டு வேட்டை நடத்தி சரத்குமாரை வீழ்த்திய விஷால், இம்முறை கலைப்புலி எஸ்.தாணுவையும் வென்றுவிடுவார் என்றே கூறப்படுகிறது.

இதுகுறித்து குஷ்பு கூறியபோது, 'விஷால் அணியினர் என் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற பெரிய பொறுப்புக்கு போட்டியிட நிறுத்தி உள்ளனர். விஷால் மற்றும் அவரது அணியினர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

அவர்களுடன் சேர்ந்து சிறப்பாக பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சி. இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் வித்தியாசத்தை காட்டுவோம். மாற்றத்தை கொண்டு வர தேர்தலில் கடினமாகவும் நேர்மையாகவும் உழைப்போம்” என்று கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions