விஷாலுக்கு மீண்டும் ஜோடியாகும் மீராஜாஸ்மின்

Bookmark and Share

விஷாலுக்கு மீண்டும் ஜோடியாகும் மீராஜாஸ்மின்

இன்றைக்கு முன்னணி ஆக்ஷன் ஹீரேவாக விளங்கும் விஷாலுக்கு ஏறக்குறைய 10 வருடங்களுக்கு முன் முகவரி கொடுத்த படம் சண்டக்கோழி. அதற்கு முன் செல்லமே படத்தில் அவர் நடித்திருந்தாலும் பட்டிதொட்டியெங்கும் விஷாலின் பெயர் ரீச்சானது சண்டக்கோழி படத்துக்குப் பிறகுதான்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீராஜாஸ்மின் ஜோடியாக நடித்த  'சண்டக்கோழி' 2005-ல் வெளியானது. மிகப்பெரிய வர்த்தக வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'சண்டக்கோழி 2' படத்தை இயக்க இருக்கிறார் லிங்குசாமி.  

விஷால்  ஹீரோவாக நடிக்கும்  'சண்டக்கோழி 2' படத்தில் கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அதேநேரம், 'சண்டக்கோழி' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த மீராஜாஸ்மின் 'சண்டக்கோழி-2' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

அது அனேகமாக கெஸ்ட் ரோலாகவும் இருக்கலாம். லிங்குசாமி தயாரித்துள்ள கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்' படம் மே 1-ஆம் தேதி ரிலீசாகிறது.  இப்படம் வெளியானதும் 'சண்டக்கோழி-2' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும். தற்போது பாயும்புலி படத்தில் நடித்து வரும் விஷால் அதை முடித்த பிறகு சண்டக்கோழி 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம். 


Post your comment





Related News
மீண்டும் ஒரு பிரபல நடிகை விவாகரத்து முடிவு? என்னதான் நடக்கிறது?
இறங்கி வராத மீரா ஜாஸ்மின்!
கல்யாணம் தள்ளுபடியானது ஆனது மீரா ஜாஸ்மினுக்கு தெரியாதாம்
கணவரை பற்றி கேட்காதீங்க: மீரா ஜாஸ்மின் கொதிப்பு
போலீஸ் பாதுக்காப்புடன் நடந்த மீராஜாஸ்மின் திருமணம்..!
நடிகை மீராஜாஸ்மின் முன் பதிவு திருமணம் செய்து கொண்டார்..!
விடிவி கணேசுக்கு \'இங்கே என்ன சொல்லுது\' மீரா.. மீரா..!
விட்டுப்போகும் சினிமாவை ஒட்டவைக்கும் மீராஜாஸ்மீனின் புதிய முயற்சி!
கமலால் வெளியிடப்பட்ட‌ ராஜேஸ்சின் இசை ஆல்பத்தில் கண்ணாமூச்சிக்கு விளையாட்டுக்கு முற்று புள்ளி வைத்த‌ மீரா ஜஸ்மின்!
காதலனுடன் ஜோடியாக நடிக்கும் மீரா ஜாஸ்மின்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions