எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகை கோவில் வாசலில் பிச்சையெடுத்த அவலம் - விஷால் என்ன செய்தார் தெரியுமா?

Bookmark and Share

எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகை கோவில் வாசலில் பிச்சையெடுத்த அவலம் - விஷால் என்ன செய்தார் தெரியுமா?

நடிகர் சங்கத்தேர்தலையடுத்து தயாரிப்பாளர் சங்கத்திலும் வெற்றி பெற்று தலைவரானார் விஷால். இவர் நலிந்த கலைஞர்களுக்கு உதவி வருகிறார்.

சமீபத்தில் சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பின்னணி நடனக்கலைஞரான திருமதி. ஜமுனா உணவுக்கே வழியின்றி சென்னை வடபழனி கோவிலின் வாசலில் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இவரைப்பற்றி சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியதையடுத்து நடிகர் விஷால் தன்னுடைய மேலாளர் முருகராஜ் மற்றும் அகில இந்திய விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி கிருஷ்ணனையும் உடனே அவர்களை சந்தித்து தேவையான உதவி செய்யுமாறு அனுப்பினார். அப்போது திருமதி. ஜமுனா அவர்களிடம் உங்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறோம் என்று தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் என்னை முதியோர் இல்லத்தில் சேர்க்கவேண்டாம். எனக்கு மாதம் மாதம் உதவி தொகைவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை நிறைவேற்றுவோம் என்று கூறி புது துணியும் அளித்துள்ளார்கள்​,​ மேலு​ம்​ மாதம் தோறும் 2000 ருபாய் வழங்கவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions