விஷாலுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் திடீர் மனமாற்றம்

Bookmark and Share

விஷாலுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் திடீர் மனமாற்றம்

நடிகர் சங்கத்தில் விஷால் அணிக்கு எதிராக ஒரு அணி செயல்பட்டு வந்தது. அதில் சிலர் தற்போது மனம் மாறி மீண்டும் நடிகர் சங்கத்தில் இணைந்துள்ளார்.

இதுபற்றி நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது "வாராகி, சங்கையா ஆகியோரின் தூண்டுதலின் பேரில் 22 உறுப்பினர்களை நடிகர் சங்கத்தின் மீதும், நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் மீதும் பொய்யான, அவதூறான குற்றச்சாட்டுகளை பரப்பினார்கள்."

"நடிகர் சங்கத்தின் முன்னால் வந்து நின்று கோஷமிட்டார்கள். அவர்களிடம் பொய்யான கையெழுத்து வாங்கி நீதிமன்றத்தில் வழக்கை வாராகி தொடர்ந்துள்ளார். அதை அறிந்த அவர்கள் நாங்கள் இதை செய்யவில்லை, எங்களிடம் அவர்கள் தவறாக கையெழுத்து வாங்கியுள்ளார்கள். நாங்கள் நிர்வாகிகளுக்கும், நிர்வாகத்துக்கும் எதிராக அவர்களுடைய தூண்டுதலின்பேரில் தான் சத்தம் போட்டோம்."

"நாங்கள் நிர்வாகிகள் மீதோ அல்லது நிர்வாகத்தின்மீது எந்தவித வழக்கும் கொடுக்கவில்லை, ஆகவே எங்களை மன்னித்து திரும்பவும் நடிகர் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரிடம் கடிதத்தை அவர்கள் கொடுத்தனர்."

"அது குறித்து இன்று நடந்த நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் விவாதித்து, அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வாராகி அவர்கள் தூண்டுதலால் தொடரப்பட்ட பொய்யான வழக்கிலிருந்து அவர்களை விடுவிக்குமாறு கையொப்பமிட்டுள்ளனர்."

"அவர்கள் அனைவரும் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு அம்பிகா, ஜெயந்தி, மல்லிகா, மலர்கொடி, தேவி, உஷா, சந்தியா, ராஜாமணி."


Post your comment

Related News
பால்யகாலம் முதல் கமல்ஹாசனுக்கு வழிகாட்டியாக இருந்தவர் சந்திரஹாசன்- நடிகர் சங்கம்
பாவனாவுக்கு நீதி கேட்டு நடிகர் சங்கம் அனுப்பிய கடிதத்திற்கு கேரள அரசு பதில்
விஷால் சஸ்பெண்ட் ரத்து: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை தள்ளிவைத்தற்கு என்ன காரணம் ?
உண்மையான கதாநாயகர்கள் அவர்கள் தான், நாங்கள் இல்லை- நடிகர் சங்கம்
நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் அஜீத் - ஷாலினி... சூர்யா, சிவகார்த்திகேயனும் பங்கேற்பு!
நடிகர் சங்கத்தின் போராட்டத்துக்கு சமூகவலைத்தளத்தில் வலுக்கும் எதிர்ப்பு
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்கும் அஜித் - ரசிகர்கள் ஆரவாரம்
நடிகர் சங்கமும் போராட்டத்தில் குதிக்கிறது
த்ரிஷா படப்பிடிப்பில் வரம்பு மீறல், நடிகர் சங்கம் கவலையுடன் வெளியிட்ட அறிக்கைAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions