ஜல்லிக்கட்டு போராட்டம் நிச்சயம் தோற்க்கும். நடிகர் சங்கம் துணை!

Bookmark and Share

ஜல்லிக்கட்டு போராட்டம் நிச்சயம் தோற்க்கும்.   நடிகர் சங்கம் துணை!

ஏறு தழுவுதலை ஆதரித்து, வரும் 20ம் திகதி தென்னிந்திய நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டம் என அறிவித்துள்ளதானது நிச்சயமாக தன்னெழுச்சியான மக்கள் மாணவர் போராட்டத்தை ஒடுக்கும் ஒரு திட்டமிட்ட நாடகம்.

ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழகம் கொதி நிலைக்கு வந்துள்ள சூழலில், அலங்காநல்லூரில் போராட்டம் வலுபெறும் நிலையில், உலகெங்கிலும் பரந்து விரிந்து மேலோங்கும் தமிழின உணர்வை வெறும் நூறு முதல் ஐநூறு பேர் கலந்து கொள்ளும் ஒரு மூலைக்குள் கொண்டுவந்து  ஒரேநாளில் முடக்கி விடும் முழு சதி.

கடந்த காலங்களில் நடிகர் சங்க உண்ணாவிரதங்களே இதற்க்கு சாட்சி.

உண்ணாவிரதத்துக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும், டெண்டு, மைக்கு செட்டு, பேனர் எல்லாம் கட்டப்படும்.  காலைமுதல் நடிக நடிகைகள் ஒவ்வொருவராக வருவார்கள்.  தமிழ் நாடு முழுக்க போராட்டத்தை காட்சிப்படுத்தும் ஊடகங்கள் அனைவரும் இங்கு குழுமுவார்கள் (தமிழ் ஸ்டார் உட்பட).   மீடியாக்கள் மக்கள் போராட்டத்தை விட்டுவிட்டு இந்நிகழ்வை  படம் பிடிக்க வந்து விடும்.

சகல ஊடகங்களிலும் இந்த உண்ணாவிரத நிகழ்வே காட்சிப்படுத்தப்படும்.  

இதோ ரஜனி வருகிறார், விஜய் இன்னும் வரவில்லை, அஜித் வருவாரா, ரசிகர்கள் மகிழ்ச்சி, ஆரவாரம் இப்படியே ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தை மறந்து சினிமாவில் மூழ்குவார்கள்.  இன்று இந்த போராட்டம் ஒன்றே தமிழ் நாட்டில் நடப்பது போன்ற ஒரு மாயை உருவாக்கப்படும். 

நாட்கணக்காக பனியிலும் வெயிலிலும் போராடத்தில் தெருவில் நிற்கும் மாணவர்கள் அனாதைகளாக எந்த வித ஊடக கவனிப்புமற்று அவர்கள் போராட்டம் கேலிக்குரியதாக்கப்படும்.  

அத்துடன் இந்த போராட்டம் நீர்த்துப்போகும்.  இது அனைத்தும் தெரிந்தே நடிகர் சங்கம் அரங்கேற்றுகிறது இந்த உண்ணாவிரத நாடகத்தை.

உண்மையிலேயே தமிழர் நலனில் அக்கறை இருந்தால் ராகவா லாரன்ஸ், டி.ராஜேந்தர், மன்சூர் அலிகான், சிவகார்த்திகேயன், அமீர் போல்  தனிப்பட்ட முறையில் போராட்டம் நடக்கும் இடங்களுக்கு  சென்று தங்கள் ஆதரவை வழங்கலாம்.  விரும்பினால்  போராட்டம் நடத்தும் மாணவர்கள் பின்னால் நடிகர் சங்கம் போகவேண்டுமே தவிர உங்களை நோக்கியதாக போராட்டத்தை ஒழுங்கமைத்து போராட்டத்தை மழுங்கடிக்காதீர்கள்.

நடிகர் சங்கத்தின் இந்த உண்ணாவிரத போராட்டம் மாணவர்களின் போராட்டங்களை நீர்த்துப்போக செய்யுமே அன்றி வேற எந்த ஆணியையும் புடுங்கப்போறதில்லை.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எழுச்சியை திசை திருப்ப அதிகார வர்க்கத்தின் முயற்சிக்கு நடிகர் சங்கத்தில் சிலர் துணை போகின்றார்கள் என்பதே இந்த போராட்ட அறிவிப்பு.   இதில் அப்பாவி நடிக நடிகைகளே இந்த சங்கத்தின் பெயரால் மாட்டிக்கிட்டு முழிக்கிறார்கள்.  சங்கத்தின் பெயரால் மனச்சாட்சிக்கு விரோதமாகவும் செயல்படவேண்டியுள்ளதாக கூறுகிறார்கள். 

உண்மையிலேயே தமிழர் நலனில் அக்கறை கொண்டிருந்தால், தனியாக போராட வேண்டிய அவசியம் இல்லை.  மாணவர்கள் ஆரம்பித்த அறப்போரின் வலுவை கூட்ட, சகல சங்கங்களும் அவர்களோடு இணைந்து போராடவேண்டுமே தவிர, பிரிந்து அல்ல.  (ஏனெனில் நீங்கள் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீர்கள்).

நடிகர் சங்கத்தை பற்றியும் அதில் இருப்பவர்களையும் பற்றி புரிந்து கொள்ளவேண்டுமாயின் சிறந்த உதாரணம் நேற்றைய கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால்  சொல்லுகின்றார்  "ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறாராம்".  

ஏதேதோ எல்லாம் நடந்து முடிந்து தமிழ்நாடே தெருவில் வந்து போராடுது; இவர் காமடி பண்ணி  சிரிப்புகாட்டுறார்.  எல்லாம் ஒரு ஓசி பப்ளிக்குட்டி (விரைவாக  உங்க கடிதத்தை போஸ்ட் பண்ணுங்க, சென்னை to டெல்லி ஒரு வாரமாகும்).  

இவர்களிடம் எந்த தொலைநோக்கு திட்டமும் இல்லை.  இவர்கள் திரையில் மட்டுமே ஹீரோக்கள்.  இன்று உண்மையிலேயே வீதியில் இறங்கி போராடும் எங்கள் அன்பு தம்பி தங்கைகளே நிய ஹீரோக்கள்.  இது அவர்கள் போராட்டம்.  இதற்க்கு அவர்களோடு இணைந்த ஆதரவு மட்டுமே வேண்டும்.  உங்கள் கையில் எடுத்து போட்டுடைக்கவேண்டாம்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது போல் இருந்து கொண்டு, போராட்டத்தை நீர்த்து போக செய்யும் முயட்சியே இது.  சிந்திப்போம்!  அல்லது இதுவரை நடந்து முடிந்த போராட்டங்கள் போலவே இதுவும் போய்விடக்கூடும்.

ஜல்லிக்கட்டு போராட்ட எழுட்சிக்கு ஆப்பு.  நடிகர் சங்கம் துணைபோனது என்ற வரலாற்றுப் பழியில் இருந்து தப்ப காலம் இன்னும் கடந்து போய்விடவில்லை... சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா? 

Courtesy: www.TamilStar.com


Post your comment

Related News
நடிகர் சங்க பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நடிகர் சங்கம் தலையிடாது: தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை
காவிரி விவகாரம்: நடிகர் சங்கத்தின் நிலை என்ன? முழு அறிக்கை இதோ!
நடிகர் சங்கம் முற்றுகை போராட்டம் வாபஸ்
நடிகர்- நடிகைகளை கணக்கெடுக்கும் பணி முடிவடைந்தது
நடிகர் சங்கத்தின் 'குருதட்சனை திட்டம்'!
மூத்த கலைஞ்சர்களுக்கு ஓய்வூதியம் : நடிகர் கார்த்தி பேட்டி
ரகசிய கூட்டம் கூட்டிய விஷால்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions