செயற்குழு கூட்டத்தை 2 வது முறையாக கூட்டிய விஷால் அணி

Bookmark and Share

செயற்குழு கூட்டத்தை 2 வது முறையாக கூட்டிய விஷால் அணி

நடிகர் சங்க தேர்தல் வெற்றிக்குப் பிறகு இரண்டு முறை நாசர் அவர்கள்  செயற்குழுக் கூட்டத்தை கூட்டியுள்ளார். 

நடிகர் சங்கத் தேர்தல் முடிந்த பின் இரண்டாவது முறையாக சென்னை தி நகரில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நேற்று மாலை 6.30 மணி அளவில் நாசர் அணியினர் செயற்குழுக் கூட்டத்தை நடத்தினர். இதில் விஷால் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து நடிகர் விவேக் அவர்களின் மகன் மறைந்த பிரசன்னாவிற்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின் தென்னிந்திய நடிகர் சங்கத்தைச் சேர்ந்த நலிந்த உறுப்பினர்களுள் நூறு பேருக்கு மாதம் தோறும் தலா ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாகக் கொடுக்க ஒரு சில முன்னணி கல்லூரி நிர்வாகிகள் முன்வந்துள்ளனர்.

இது மட்டுமின்றி நடிகர் சூர்யா ரூ 10 லட்சம் பணவுதவி அளித்துள்ளார். மேலும், நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசு உள்ளது என்று முதல் செயற்குழுக் கூட்டத்திலேயே கூறியிருந்தனர்.

தற்போது அவர்கள் கூறியது போலவே நேற்று நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசுகளை கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து நடிகர் சங்க கட்டிட விவகாரத்திலும் இதேபோல் உடனடி முடிவு எடுக்கவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions