தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசிய விஷால்...!

Bookmark and Share

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசிய விஷால்...!

நடிகர் சங்கத்திற்கு கடந்த அக்டோபர் 18ம் தேதி நடைபெற்ற தேர்தலில், சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் மோதியது.

இதில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றதை அடுத்து, விஷால் பொதுச்செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகிய நிர்வாகிகள் இன்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சிறப்பாக நடக்க உதவியதற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நடிகர் விஷால் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று தமிழக முதல்வரைச் சந்தித்தோம். அருமையான சந்திப்பு. நடிகர் சங்கத்துக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று முதல்வர் தெரிவித்தார். முதல்வருக்கு நன்றி என்று டிவிட் செய்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions