நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி அமோக வெற்றி

Bookmark and Share

நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி அமோக வெற்றி

நேற்று மாலை 6 மணியளவில் வாக்குகள் என்னும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து நேரடியான செலுத்திய வாக்குகளை எண்ணினர்.

முதலில், தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் முடிவில், சரத்குமார் அணியினர் முன்னிலை பெற்றிருந்தனர். உணவு இடைவேளைக்குப் பின்னர், உறுப்பினர்கள் நேரடியாக அளித்த வாக்குகள் எண்ணப்பட்டன. 

முதல் இரண்டு சுற்றுகளில் முன்னிலை பெற்ற சரத்குமார் அணியினர், பின் அடுத்தடுத்த சுற்றுகளில் பின்தங்கத் தொடங்கினர். பொதுச்செயலாளர் பதவிக்கு, முதன்முறையாக தேர்தலை சந்தித்த நடிகர் விஷால், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராதாரவியை வீழ்த்தி, வாகை சூடினார். நடிகர் விஷால், 1,445 வாக்குகள் பெற்றார். ராதாரவி 1,138 வாக்குகள் பெற்றார்.

நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சரத்குமார், நாசர் இடையே கடும் போட்டி நிலவியது. குறைவான வாக்குகள் வித்தியாசத்தில், இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால், பரபரப்பு கூடியது. இறுதியில், நடிகர் நாசர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகர் சரத்குமாரை வீழ்த்தி வெற்றி பெற்றார். 

நடிகர் நாசருக்கு 1,334 வாக்குகளும், நடிகர் சரத்குமாருக்கு 1,231 வாக்குகளும் கிடைத்தன. பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட, விஷால் அணியின் நடிகர் கார்த்தி வெற்றி பெற்றுள்ளார். 

நடிகர் கார்த்தி, 1,384 வாக்குகளும், இவரைத் எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.எஸ்.ஆர். கண்ணன் 1,031 வாக்குகளும் பெற்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில், பாண்டவர் அணியினர், அமோக வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால் முதல்வர் ஜெயலலிதாவிற்கும், காவல்துறைக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தார். 
நடிகர் சங்கத்தில் நல்ல மாற்றங்கள் கொண்டுவரப்படும் என தலைவராக தேர்வு செய்யப்பட்ட நாசர் தெரிவித்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions