மே-2ந்தேதி மதுரை செல்கிறார் பாயும் புலி விஷால்!

Bookmark and Share

மே-2ந்தேதி மதுரை செல்கிறார் பாயும் புலி விஷால்!

பாண்டியநாடு படத்தை அடுத்து விஷால்-சுசீந்திரன் கூட்டணி இணைந்திருக்கும் படம் பாயும் புலி. கார்த்தியை வைத்து நான் மகான் அல்ல என்று ரஜினி பட டைட்டிலை வைத்து ஏற்கனவே ஒரு படத்தை இயக்கிய சுசீந்திரன், இரண்டாவது முறையாக மீண்டும் ரஜினி பட டைட்டிலை வைத்து இந்த பாயும்புலி படத்தை இயக்கி வருகிறார்.

மேலும், பாண்டியநாடு படத்தைப்போன்று இந்த படத்தையும் மதுரை கதைக்களத்தில் இறக்கும் அவர், முந்தையமுறை மதுரை கிராமத்து மண்வாசணையில் எடுத்தவர், இந்த படத்தை மதுரை கதை என்றாலும் மதுரை நகரத்து பின்னணியில் இயக்குகிறார்.

அதோடு போலீஸ் கெட்டப்பில் விஷால் நடிக்கும் இந்த படத்தில் ரவுடிகளை அவர் வேட்டையாடும் காட்சிகளில் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான முறையில் படமாக்கப்படுகிறதாம்.

மேலும், முதல்கட்டமாக சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வந்த சுசீந்திரன், மே மாதம் 2-ந்தேதி முதல் மதுரைக்கு சென்று இரண்டாம்கட்ட படப்பிடிப்பை நடத்துகிறார். அப்போது, முக்கியத்துவம் வாய்ந்த சண்டை மற்றும் சேஸிங் காட்சிகளை படமாக்குபவர், விஷால், காஜல்அகர்வால் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளையும் படமாக்குகிறாராம். 

 


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!
முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions