விஷாலின் வெறித்தனமான நடிப்பு!

Bookmark and Share

விஷாலின் வெறித்தனமான நடிப்பு!

வெண்ணிலா கபடிக்குழு, அழகர் சாமியின் குதிரை, பாண்டியநாடு ஆகிய படங்களை கிராமத்து கதைகளில் இயக்கினார் சுசீந்திரன். இதில் பாண்டியநாடு படத்தை மதுரை கதைக்களத்தில் இயக்கினார்.

ஏராளமான படங்கள் மதுரை பின்னணியில் தயாராகியிருந்தபோதும், தனது பாணியில் சற்று வித்தியாசப்படுத்தியும் படம் பண்ணியிருந்தார் அவர். இந்த நிலையில், அதையடுத்து புதுமுகங்களை வைத்து நேருக்கு நேர் என்றொரு படத்தை கடந்த சில மாதங்களாக படமாக்கி வந்த சுசீந்திரன் அப்படத்தை கோவையில் நடக்கும் கதையில் இயக்கியிருக்கிறாராம்.

ராஜபாட்டை படத்துக்கு பிறகு அவர் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படம் போன்று இதுவும் ஒரு வித்தியாசமான கதையில் தயாராகியுள்ளதாம். அதையடுத்து, இப்போது விஷாலை  இயக்கும் பெயரிடப்படாத படத்தை தற்போது தொடங்கி விட்டார் சுசீந்திரன்.

விஷால் நடித்த பாண்டியநாடு படத்தைப்போலவே இதுவும் மதுரையில் நடக்கும் கதை என்றபோதும், இந்த படத்தை கிராமத்து கதையாக இல்லாமல் நகரத்தில் நடிப்பது போன்று படமாக்குகிறாராம் அவர்.

மேலும், ஏற்கனவே விஷால், சத்யம் உள்பட சில படங்களில் போலீஸ் கெட்டப்பில் நடித்திருந்தபோதும், இப்படத்தில் இதுவரை பார்க்காத விஷாலை பார்க்கலாமாம். அந்த அளவுக்கு அதிரடி போலீசாக நடிக்கும் விஷால், சமூக விரோதிகளை வேட்டையாடும் வெறித்தனமான நடிப்பு புதிய கோணத்தில் படமாக்கப்படுகிறதாம்.


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
அண்ணாதுரை படம் குறித்து விஜய் ஆண்டனி கூறும் சுவாரஷ்ய தகவல்கள்.!
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா
ரசிகர்களை கவர ‘அண்ணா துரை’ படக்குழு புதுமுயற்சி
விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை சென்சார் ரிசல்ட்
பாகுபலி-2 ரிலிஸில் சிக்கல், தமிழகத்தில் 28-ம் தேதி வெளிவருமா?
S3 முதல் நாள் தமிழக வசூல் எத்தனை கோடி தெரியுமா? முழு விவரம்
அண்ணாதுரை... விஜய் ஆன்டனியின் புதுப்படத் தலைப்பு!
தமிழர்களிடமிருந்து பண்பை கற்றுக்கொள்ளுங்கள்- வட இந்தியர்களே ஆச்சரியம்
ரஜினிகாந்த் மகளின் கோரிக்கை ஏற்பு: சிறந்த சண்டை காட்சிக்கும் இனி தேசிய விருது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions