தமிழில் கூடுவிட்டு கூடுபாயும் கதையில் இன்னொரு படம்!

Bookmark and Share

தமிழில் கூடுவிட்டு கூடுபாயும் கதையில் இன்னொரு படம்!

தமிழ் சினிமாவில் எத்தனையோ வித்தியாசமான கதைகள் வந்திருக்கிறது. ஆனால் கூடுவிட்டு கூடுபாயும் கதை என்றால் பிரபு நடித்த ‘சின்ன வாத்தியார்’தான் எல்லோருக்கும் நினைவு வரும். இந்நிலையில் இதே ஐடியாவில் தற்போது பிரகாமியம் எனும் படம் உருவாகி வருகிறது.

பொறியியல் பட்டதாரியான பிரதாப் இப்படத்தை தயாரித்து இயக்கி நடிக்கிறார். பார்வதி, சுபா, ரகுமான், மனோ ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்கள் போக ‘கத்தி சண்டை’ படத்தில் விஷால் நண்பராக நடித்து கண்கலங்க வைத்த வேலூர் வாசுதேவனும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும் கூட. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions