விவசாயிகள் பற்றி பேசுகிறோம் என்று கூறி மற்ற விஷயங்களை பேசிவிட்டு வந்த நடிகர்கள்- வெளியான உண்மை தகவல்

Bookmark and Share

விவசாயிகள் பற்றி பேசுகிறோம் என்று கூறி மற்ற விஷயங்களை பேசிவிட்டு வந்த நடிகர்கள்- வெளியான உண்மை தகவல்

தமிழ்நாட்டில் விவசாயம், விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக டில்லியில் ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் இவர்களை போய் சந்தித்த நடிகர் விஷால், பிரகாஷ்ராஜ் குழு பின் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்து விவசாயிகள் பற்றி மனு கொடுத்திருப்பதாக கூறினர்.

இந்நிலையில் இவர்கள் சந்திப்பில் என்ன நடந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அருண் ஜெட்லியை சந்திக்க இவர்கள் உரிய அனுமதி பெறாததால் டில்லியில் உள்ள ஒரு பெரிய ரியல் எஸ்டேட் பிரமுகர் உதவியோடு அவரை சந்தித்துள்ளனர்.

ஒரு நிமிடம் அந்த சந்திப்பில் விவசாயிகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லையாம். அந்த மனுவில் இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்ததாம்.

தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, நிதி அமைச்சரிடம், அவர்கள் எதுவும் பேசவே இல்லையாம்.

உண்மை என்னவெனில் இவர்கள் நடிக்கவிருக்கும் படத்திற்காக படப்பிடிப்பு நடத்த, ஒரு வீடு பிடிக்கத்தான் டில்லி வந்துள்ளனர் என சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions