நான் ஓய மாட்டேன்; தொடர்ந்து கேள்வி கேட்பேன் – விஷால் அதிரடி!

Bookmark and Share

நான் ஓய மாட்டேன்; தொடர்ந்து கேள்வி கேட்பேன் – விஷால் அதிரடி!

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தை அவதூறாக பேசிவிட்டார் என தற்காலிகமாக தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், ” தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சினிமாவில் ஆரோக்கியமான போக்கு கொண்டுவருவதே எனது விருப்பம்.

ஆனால் கேள்வி கேட்டால் நீக்கம் என்பது உண்மையில் எனக்கு வியப்பாக உள்ளது. என்னை நீக்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் பார்த்துதான் நானே தெரிந்துகொண்டேன். எனக்கு முறைப்படி எந்த கடிதமும் வரவில்லை. இதுதொடர்பாக இதற்குமுன்பு வந்த ஒரு கடிதத்திலும் பிரெசிடெண்ட்டின் கையொப்பம் இல்லை. வழக்கறிஞரின் கையொப்பம் மட்டுமேஇருந்தது.

நான் தாணு அண்ணன், சிவா சார் என எல்லோருக்கும் மரியாதை கொடுப்பவன். நான் கேள்வி கேட்பது பிரச்சனை என்றால் நான் ஓய மாட்டேன்; தொடர்ந்து கேள்வி கேட்பேன். ஜனவரியில் தேர்தல் நடக்கவேண்டும் என்பதே என் விருப்பம். அதில் போட்டியிடுவேன்” என்றார்.


Post your comment





Related News
பட அதிபர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: விஷால் அறிவிப்பு
அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால்?- அதிரடியாக முடிவு எடுத்த விஷால்
விஷ்ணு விஷால் - அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பை கைப்பற்றிய படக்குழு
டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் சினிமா சம்பந்தமாக வெங்கய்யா நாயுடுவை சந்தித்த விஷால் மற்றும் குழு
விஷால் லைட்டைக் கொஞ்சம் உங்க பின்னாடி திருப்புறீங்களா?
திருட்டு விசிடி பற்றி தகவல் தந்தால் ரூ.1 லட்சம் பரிசு.. விஷால் அதிரடி அறிவிப்பு
ஆவணங்களை திருடிய விஷால் மற்றும் குழு- போலீஸில் புகார்
விஷால் கல்யாணம் எப்போது - பதில் அளித்த விஷால் அப்பா ஜி கே ரெட்டி
தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அடுத்த அதிரடி முடிவு
வலைதள விமர்சனங்களை யாராலும் தடுக்க முடியாது- விஷாலுக்கு பிரபல தயாரிப்பாளர் அதிரடி பதில்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions