அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்

Bookmark and Share

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்

விஷால் நடித்து பி.எஸ்.மித்ரன் இயக்கிருந்த படம், இரும்புதிரை. இதில் ஹீரோயினாக சமந்தா நடித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். டிஜிட்டல் உலகில் நடக்கும் யாருக்கும் தெரியாத உண்மை நிகழ்வுகளை பற்றி கூறியிருந்த இப்படம் கடந்த மே மாதம் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி படமாக அமைந்தது.

சொல்ல போனால் வெற்றி படத்திற்காக காத்திருந்த விஷாலுக்கு திருப்புமுனை படமாக கூட இப்படம் அமைந்தது. தற்போது மித்ரனின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதுவும் இரும்புதிரையை போன்றே டிஜிட்டல் உலகை பற்றிய படம் தானாம்.

ஆனால் இப்படத்தில் விஷாலுக்கு பதிலாக கார்த்தி நடிக்க இருக்கிறாராம். இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள், ஒருவராக நிவேதா பெத்துராஜ் தேர்வு செய்யப்பட்ட நிலையில் மற்றொரு ஹீரோயினாக முன்னணி நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.

அது கீர்த்தி சுரேஷ் தான் எனவும் பேச்சுகள் எழுகின்றன. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இரும்புதிரையை போல் இருந்தாலும் அதன் இரண்டாம் பாகம் இல்லை என இயக்குனர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்!
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்
சர்கார் படத்தின் அதிரடி முடிவுக்கு பின்னால்! ரசிகர்களை கொண்டாடவைக்கும் விசயம்
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions