விஷாலுடன் இணைந்த ராதாரவி...!

Bookmark and Share

விஷாலுடன் இணைந்த ராதாரவி...!

‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ ஆகிய படங்களை இயக்கிய முத்தையா, விஷாலை வைத்து ‘மருது’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல தயாரிப்பாளர் ‘ஸ்டுடியோ 9’ சுரேஷ் நடிக்கவுள்ளார்.  இதில், நடிகர் ராதாரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் சங்க தேர்தலில் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு, இருவரும் இணைந்து நடிக்கவுள்ளது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. என்னதான், நடிகர் சங்க தேர்தலில் இருவரும் போட்டியாளர்களாக கருதப்பட்டாலும், பொதுவில் இருவரும் நடிகர்கள்தான்.

இதில் தங்களுக்கு போட்டியில்லை என்பதை இருவரும் நிரூபித்திருக்கிறார்கள். இவ்வாறு நடிகர்களுக்குள் எந்த போட்டியும், பொறாமையும் இல்லாமல் இருப்பது தமிழ் சினிமாவில் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கும் எனவும் சினிமா விமர்சகர்கள் கருதுகிறார்கள். 

விஷால் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கதகளி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு ‘மருது’ படத்தில் நடிப்பார் என தெரிகிறது.


Post your comment





Related News
எதிரிகள் தயாராக இருங்கள் - வெற்றி பெற்றதும் விஷாலின் அதிரடி பேச்சு
ராதாரவி பட டீசரை வெளியிடும் விஷால்!
விஷால் முன்னிலை, ராதாரவியை பின்னுக்கு தள்ளினார்!
30 -ஆம் தேதி நடிகர் சங்க செயற்குழு கூட்டம் - கட்டம் கட்டப்படுவாரா விஷால்?
டி.எஸ்.பாலையாவுக்கு நூற்றாண்டு விழா: நடிகர் சங்க பொதுக்குழு தீர்மானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions