குழந்தை பெற்றாலும் தொடர்ந்து நடிப்பேன் - சமந்தா

Bookmark and Share

குழந்தை பெற்றாலும் தொடர்ந்து நடிப்பேன் - சமந்தா

திருமணத்துக்குப் பிறகும் சமந்தா நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த ‘ரங்கஸ்தலம்’ ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இந்த படத்தில் சமந்தா நாயகனுக்கு முத்தம் கொடுத்தது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘நடிகை திருமணத்துக்கு பிறகு முத்தம் கொடுத்தால் தவறு என்கிறார்கள். திருமணம் ஆன ஹீரோக்கள் முத்தக்காட்சியில் நடித்தால் கேள்வி கேட்பதில்லை. கதைக்கு ஏற்ப அதில் நடித்திருக்கிறேன். திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பதற்கு எனது குடும்பத்தார் முழு ஒத்துழைப்பும், உற்சாகமும் கொடுத்து வருகிறார்கள்.

அதனால்தான் என்னால் இப்போதும் நடிப்பில் முழு கவனம் செலுத்த முடிகிறது” என்று பதில் அளித்தார். இப்போது குழந்தை பிறந்தால் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள சமந்தா, “குழந்தை பெற்றுக் கொண்டால் முழு நேர குடும்பத்தலைவி ஆகி விடுவீர்களா? என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள்.

நான் குழந்தை பெற்றுக் கொண்டாலும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். ஒரு வேளை கதாநாயகியாக நடிக்கும் வேடம் கிடைக்கவில்லையென்றால், பொருத்தமான நல்ல வேடங்களில் நடிப்பேன். தொடர்ந்து சினிமாவில் இருப்பேன்” என்று கூறியுள்ளார்.

விஷால் ஜோடியாக சமந்தா நடித்துள்ள `இரும்புத்திரை' வருகிற 11-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 


Post your comment





Related News
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்
என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்
பண முதலைகளுக்கு வங்கி கடன், இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்.!
படத்தை பார்க்காமலேயே வழக்கு போடுவதா? இரும்புத்திரை இயக்குனர் விளக்கம்
புதுமுக விருது பெற்ற நடிகர் சுரேஷுக்கு குவியும் பட வாய்ப்புகள்!
உடல் நலக்குறைவு காரணமாக விஷால் மருத்துவமனையில் அனுமதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions