சுசீந்திரன் படத்தில் சமுத்திரக்கனி வில்லனா? விஷால் மறுப்பு...

Bookmark and Share

சுசீந்திரன்  படத்தில் சமுத்திரக்கனி வில்லனா? விஷால் மறுப்பு...

சுந்தர்.சி. இயக்கிய ஆம்பள படத்தை அடுத்து தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஷால். காவல் கோட்டம், வேட்டை மன்னன்  என இரண்டு தலைப்புகளில் ஏதாவது ஒரு தலைப்பு சூட்டப்பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  

விஷாலுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்கள் இருவரும் இணையும் முதல் படம் இது. விஷால் காஜல் அகர்வால் தவிர இப்படத்தில் வேறு யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று அதிகாரபூர்வ தகவல் இல்லை.

எனினும் சமுத்திரக்கனி நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தது.  அதுமட்டுமல்ல, விஷாலுடன் மோதும் அதிரடி வில்லனாக  சமுத்திரக்கனி நடிப்பதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், சமுத்திரக்கனி ஏற்றுள்ள வேடம் பற்றி தற்போது புதிய தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடிக்கவில்லையாம்! விஷாலின் மூத்த சகோதரராக தான் நடிக்கிறாராம் சமுத்திரக்கனி!  வில்லனாக பெங்களூரை சேர்ந்த ஒரு புதுமுகம் தான் நடிக்கிறாராம்! இந்த தகவல்களை நடிகர் விஷாலே தெரிவித்துள்ளார். நம்புங்கப்பா.... ஹீரோவே சொல்றாருல்ல...


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions