நாளை தொடங்குகிறது நடிகர் சங்க தேர்தல் வேட்புமனு தாக்கல்

Bookmark and Share

நாளை தொடங்குகிறது நடிகர் சங்க தேர்தல் வேட்புமனு தாக்கல்

தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற (அக்டோபர்) 18-ந் தேதி சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை நடக்கவுள்ளது.

தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டு உள்ளார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய கடைசி நாள் 3-ந் தேதி ஆகும். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

தேர்தலில் போட்டியிட தாக்கலான வேட்புமனுக்கள் 4-ந்தேதி காலை பரிசீலிக்கப்பட்டு அன்று மாலை 4 மணிக்கு போட்டியிட தகுதியான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வேட்பாளர் பட்டியல் 8-ந் தேதி வெளியிடப்படும். நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் மற்றும் விஷால் தலைமையில் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. 

தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியும் துணைத்தலைவர் பதவிக்கு சிம்பு, விஜயகுமார் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு மறைந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் மகன் எஸ்.எஸ்.ஆர். கண்ணனும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால் நிற்கிறார். நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ், அஜய்ரத்னம், போன்றோரும் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.


Post your comment





Related News
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions