சரத்குமாருக்கு நன்றி சொன்ன விஷால்

Bookmark and Share

சரத்குமாருக்கு நன்றி சொன்ன விஷால்

நடிகர் சங்க கட்டிட விவகாரம் தொடர்பாக நடிகர் சங்கத்தின் தற்போதைய தலைவர் சரத்குமாருக்கும், நடிகர் விஷாலுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் இருந்து வருகிறது.

நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என விஷால் மற்றும் அவருடன் துணையாக இருக்கும் மேலும் சில நடிகர்கள் நீண்ட நாட்களாகவே முறையிட்டு வருகிறார்கள். ஆனால், அதில் இதுவரை எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

இது தொடர்பாக நடிகர் சங்க செயலாளர் ராதாரவி உட்பட பல நிர்வாகிகள் விஷாலை கடுமையாகத் தாக்கி பேசியிருக்கிறார்கள். அவற்றிற்கு  விஷாலும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

விஷால் பின்னால் இன்றைய இளம் முன்னணி ஹீரோக்கள் பலர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் உத்தம வில்லன் பிரச்சனை விவகாரத்தில் நடிகர் சங்கத் தலைவரான சரத்குமார் கடந்த இரண்டு நாட்களாக படம் வெளிவருவதற்கான பேச்சு வார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை முடிப்பதற்கு உதவிய சரத்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார் விஷால். அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில், “உத்தம வில்லன் இன்று தமிழ்நாடு முழுவதும் வெளியானதில் மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு சரத்குமாரின் மனைவியான நடிகை ராதிகா, “நீங்கள் சரத்குமாருக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்,” எனக் கூறியிருந்தார். அதற்கு விஷால், “நான் இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி சொல்கிறேன்.

சரத் சார், பைனான்சியர்கள், தயாரிப்பாளர் சங்கம், விக்ரமன், அன்புச் செழியன், ஞானவேல்ராஜா, சூரியா உள்ளிட்டோருக்கு நன்றி” என பதிலளித்திருந்தார். தொடர்ந்து ராதிகா, “நடிகர் சங்கத் தலைவரை பாராட்டியதற்கு நன்றி விஷால், எப்போதுமே முதலில் பாராட்டுவதற்கு,” என்றார். “ஒரு தீர்வை உருவாக்குவதற்கும், பிரச்சனையை முடிப்பதற்கும் சரத் சாரை முதலில் பாராட்டுவது நான்தான்,” என அதற்கு விஷால் பதிலளித்துள்ளார்.

உத்தம வில்லன் விவகாரத்தில் சரத்தை விஷால் பாராட்டியதைத் தொடர்ந்து எதிரெதிர் துருவங்களாக இருந்தவர்கள் கொஞ்சம் நெருங்கி வருவது போல் தெரிகிறது என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.


Post your comment





Related News
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions