நீங்கள் அனைவரும் உயிர்வாழும் காலத்தில் உங்களுக்கு நான் உதவுவேன் - நடிகர் விஷால்

Bookmark and Share

நீங்கள் அனைவரும் உயிர்வாழும் காலத்தில்  உங்களுக்கு நான் உதவுவேன் - நடிகர் விஷால்

நடிகர்  சங்க தேர்தலை முன்னிட்டு நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியின் ஆலோசனைக்  கூட்டம் ராகவேந்திரா திருமண  மண்டபத்தில் வைத்து இன்று நடைபெற்றது . 

கூட்டத்தில் நடிகர் சத்ய ராஜ் பேசியது , எனக்கு முதலில் எந்த அணிக்கு அதரவு தெரிவிப்பது என்று மிக பெரிய குழப்பம் நிலவி வந்தது , இப்போது நான் இளைஞர்களுக்கு என் ஆதரவை தெரிவிக்கலாம் என்று முடிவு எடுத்துவிட்டேன். எங்கள் வீட்டில் ஏதாவது ஒரு வேலை வந்தால் அதை நான் செய்வதை வீட எங்கள் வீட்டில் உள்ள இளைஞனான சிபியை தான் செய்ய சொல்வேன்.கார்த்தி என்னிடம் விருப்பம் இருந்தால் இந்த ஆலோசனை வாருங்கள் என்று அழைத்தார். அவர் என்னை வற்புறுத்தாமல் அழைத்த விதம் என்னை கவர்ந்துவிட்டது. அதுவே என்னை இங்கு வரவழைத்துவிட்டது. எனக்கு நட்பை வீட நல்ல விஷயங்கள் நடப்பதே முக்கியம்.

நடிகர் வடிவேலு பேசியது அரங்கத்தில் சிரிப்பலையை உண்டாக்கியது ; நான் ஒரு படத்தில் " கிணற காணோம் கிணற காணோம் " னு போலிச கூட்டிட்டு தேடிட்டு இருப்பேன் , அதே மாதிரி இங்க " நடிகர் சங்க கட்டிடத்த காணோம் காணோம் " நம்மள தேட வச்சிடாங்க . நான் இப்போ சொல்றேன் நல்ல குறிச்சி வச்சிகோங்க கண்டிப்பா பாண்டவர் அணி தான் வர்ற நடிகர் சங்க தேர்தல்ல ஜெயிக்கும். இவ்வளவு நாள் நம்மள அவங்க எல்லாரும் சேர்ந்து  ஏமாற்றிட்டாங்க. நாங்க எல்லாரும் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவோம் , அதை  கோவில் மாதிரி பார்த்துப்போம் என்றார்.

நடிகர் டெல்லி கணேஷ் பேசியது , எனக்கு ஒரு சந்தேகம் எல்லா நடிகர்களும் இங்கே இருக்கிறார்கள் , அப்போ அங்கே யார் இருப்பார்கள் ?? விரைவில் நடிகர் சங்க கட்டிடம் மீட்க்கப்பட்டு நம் கையில் திரும்பி வரும் காலம் வெகுதொலைவில் இல்லை , நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார். நடிகர் சுந்தர் ராஜன் பேசும் போது இப்போது நடிகர் சங்க தேர்தல் வைத்தால் கூட நான் பாண்டவர் அணிக்கு ஒட்டு போடா தயாராக உள்ளேன் என்றார்.

நடிகர் விஷால் பேசும் போது , இங்கே வந்த எல்லோருக்கும் நன்றி , எங்களுடன் இளைஞர் பட்டாளம் மட்டுமல்ல, பெண்களும் இருக்கிறார்கள். பல மூத்த நடிகர்களின் ஆதரவு எங்களுக்கு தான். என்னை பொறுத்த வரை எல்லோரும் வாக்களிக்க வேண்டும். என்னை நடிகர் ராதா ரவி பரதேசி நாயே என்று கேவலமாக திட்டி பேசியுள்ளார். பரவாயில்லை நாய் நன்றியுள்ள ஜென்மம் , என்னை நாயோடு ஒப்பிட்டதற்கு நன்றி என்றார்.

இங்கே நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் 20 , 30 வருடங்களாக போட்டியிட்டு வருகிறார்கள். அமெரிக்க   ஜானாதிபதி தேர்தலில் கூட இரண்டு முறை தான் போட்டியிட முடியும் ஆனால் இங்கே கட்டுப்பாடே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. எங்கள் உறவினர்களின் ஈம சடங்குகளில் நடிகர் ராதா ரவி பங்கேற்கிறார் என்று பலர் சொல்கிறார்கள்.

நான் நீங்கள் அனைவரும் உயிரோடு இருக்கும்போது உங்களோடு இருப்பேன். வெட்டியான் தான் ஈம சடங்குகளில் இருப்பார். மனிக்கவும் நான் வெட்டியான்களை தவறாக கூறவில்லை அவர்கள் ஆற்றும் பனி சிறந்தது. நான் ராதா ரவி என்ன பதவிக்கு போட்டியிடுகிராரோ அதே பதவிக்கு தான் போட்டியிடுவேன் , இது தான் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட காரணம். கார்த்தியை போல் ஒரு சிறந்த பொருளாளர் கிடைக்கமாட்டார். அவர்க்கு கொடுக்கப்பட்ட அந்த பணியை சிறப்பாக ஆற்றிவருகிறார் என்றார் நடிகர் விஷால்.


Post your comment

Related News
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
நல்ல கதை அமைந்தால் சரத்குமாருடன் நடிக்க தயார் : விஷால் பேட்டி
நடிகர் சங்கத்தின் அடுக்குமாடி சொத்தின் நிலை என்ன?
இனி ஒரே அணியாக செயல்படுவோம்: நடிகர் விஷால் பேட்டி
பாண்டவர் அணியின் வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்தது இதுவே!
விஷால் அணியில் 25 பேர், சரத்குமார் அணியில் 4 பேர் வெற்றி
வழக்கு போட்டதற்கு விஷால் கொடுத்த பதிலடி..!
தேர்தலில் வெற்றி பெற்றால் தினமும் நிறை-குறைகளை கலைந்து எடுப்போம்: விஷால் உறுதி
நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு விஷால் அணி கமிஷனரிடம் மனு
தேர்தல் எதிரொலி : நாடக நடிகர்கள் 934 பேர் தபால் ஓட்டுப்போட முடிவு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions