நாடக நடிகர்களின் ஆதரவு திரட்ட 4 நாள் சுற்றுப்பயணம் செய்யும் பாண்டவர் அணி

Bookmark and Share

நாடக நடிகர்களின் ஆதரவு திரட்ட 4 நாள் சுற்றுப்பயணம் செய்யும் பாண்டவர் அணி

 நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார், விஷால் அணிகள் மோதுகின்றன. இரு தரப்பினரும் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு ஓட்டு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

சென்னையில் வசிக்கும் நடிகர், நடிகைகளிடம் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கின்றனர்.  வெளிமாநிலங்களில் வசிக்கும் நதியா, நக்மா, அமலா, அனுஷ்கா, தமன்னா, அசின் உள்ளிட்ட நடிகைகளிடம் தனி குழுக்களை அனுப்பி வைத்து ஓட்டு சேகரிக்கின்றனர்.

தேர்தலில் ஓட்டுபோட தகுதி உள்ளவர்களாக 3,139 பேர் உள்ளனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாடக நடிகர்-நடிகைகள். இவர்களின் ஓட்டுகள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவைகளாக உள்ளன. எனவே நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்ட இரு அணியினரும் வரிந்து கட்டி இறங்கியுள்ளனர். 

திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, கோவை, சேலம், கரூர் நாமக்கல் பகுதிகளில் அதிக அளவில் நாடக நடிகர்-நடிகைகள் உள்ளனர். சரத்குமார் அணி சார்பில் ராதாரவியும் அவரது ஆதரவு நடிகர்களும் இந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதுபோல் விஷால் அணியினரும் நாடக நடிகர்களிடம் ஓட்டு சேகரிக்க புறப்படுகிறார்கள். சென்னையில் இருந்து தனி பஸ்சில் அவர்கள் செல்கின்றனர். 

 


Post your comment





Related News
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
நல்ல கதை அமைந்தால் சரத்குமாருடன் நடிக்க தயார் : விஷால் பேட்டி
நடிகர் சங்கத்தின் அடுக்குமாடி சொத்தின் நிலை என்ன?
இனி ஒரே அணியாக செயல்படுவோம்: நடிகர் விஷால் பேட்டி
பாண்டவர் அணியின் வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்தது இதுவே!
விஷால் அணியில் 25 பேர், சரத்குமார் அணியில் 4 பேர் வெற்றி
வழக்கு போட்டதற்கு விஷால் கொடுத்த பதிலடி..!
தேர்தலில் வெற்றி பெற்றால் தினமும் நிறை-குறைகளை கலைந்து எடுப்போம்: விஷால் உறுதி
நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு விஷால் அணி கமிஷனரிடம் மனு
தேர்தல் எதிரொலி : நாடக நடிகர்கள் 934 பேர் தபால் ஓட்டுப்போட முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions