ஓட்டுக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்கும் சரத்குமார் அணி! குற்றம் சாட்டும் விஷால் அணி

Bookmark and Share

ஓட்டுக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்கும் சரத்குமார் அணி! குற்றம் சாட்டும் விஷால் அணி

விஷால் தலைமையிலான அணியினர் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடக நடிகர்களின் ஆதரவை திரட்டி வருகின்றனர். நேற்று சேலத்தில் நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு கேட்டனர். 

திருச்சியில் இன்று நாடக நடிகர்களை சந்திப்பதற்காக விஷால் அணியினர் முகாமிட்டு இருந்தனர். காலை 10 மணிக்கு நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன், விக்னேஷ், சாந்தனு, எஸ்.வி.சேகர், நடிகைகள் கோவை சரளா, குட்டி பத்மினி, ரோகினி உள்ளிட்டவர்கள் நாடக நடிகர்கள் மத்தியில் பேசி ஆதரவு திரட்டினர். 
பின்னர் அவர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். 

நடிகர் கருணாஸ்:– தென்னந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 18–ந்தேதி நடைபெறுவதை முதன் முறையாக தமிழகமே உற்றுப்பார்க்கிறது. எதிரணியினர் சில சூழ்ச்சிகள் செய்து தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள். மணப்பாறையை சேர்ந்த நாடக நடிகர் குடும்பத்திடம் ஒரு ஓட்டுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 5 ஓட்டுக்கு ரூ.15 ஆயிரம் தருவதாக கூறி இருக்கிறார்கள்.

ஓட்டுக்கு பணம் என்ற சூழ்ச்சிக்கு யாரும் பலியாகி விடக்கூடாது. அதே போன்று தபால் ஓட்டுக்களிலும் முறைகேடு செய்ய எதிரணியினர் முயற்சிக்கிறார்கள். நாடக நடிகர்கள் ஓட்டுக்களை நேரடியாக பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

நடிகர் கார்த்தி:– தேர்தல் பரபரப்பு சூடு பிடித்துவிட்டது. தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்பதால் தபால் ஓட்டுக்களில் தவறு செய்ய முயற்சி நடக்கிறது. தேர்தலில் இருந்து விலகும் எண்ணம் இல்லை. பெப்சி அமைப்புக்கு தேர்தல் நடக்கிறது. அதுபோன்று நடிகர் சங்கத்திற்கும் தேர்தல் நடக்கிறது என்றார். 

அதன்பிறகு நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர்கள் அளித்த பதில் விபரம் வருமாறு:– 

கே: இந்த போட்டி நடிகர் விஷாலுக்கும், சரத்குமாருக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சனையால் ஏற்பட்டது என்கிறார்களே? 

விஷால்: சரத்குமார் அவர்களுக்கும், எனக்கும் எந்த சொந்த பிரச்சனையும் கிடையாது. அவர் நடிகர் சங்க தலைவர். நான் நடிகர், அவ்வளவுதான். நடிகை ராதிகா விஷால் ரெட்டி என்று கூறியதற்கு பதில் கூறமுடியாது. இது தென்னிந்திய நடிகர் சங்கம். 

கே: நட்சத்திர கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்தது போல நடிகர் சங்கத்திற்கும் கேப்டனாக விஷால் முயற்சிக்கிறார் என்று சிம்பு குற்றம் சாட்டியிருக்கிறாரே? 
விஷால்: தமிழ் திரையுலகில் ஒரே கேப்டன் விஜயகாந்த் தான். 

கே: நடிகர் சங்க பிரச்சனையால் குடும்பங்கள் இரண்டாகி விட்டது. பாக்கியராஜ் ஓரணியிலும், அவரது மகன் சாந்தனு ஓரணியிலும் இருக்கிறார்களே? 

சாந்தனு: எனது தந்தை அங்கு ஒரு நிகழ்ச்சிக்குத்தான் சென்றிருந்தார். அந்த மேடையில் சிம்பு கூறிய சில கருத்துக்கள் ஏற்புடையது அல்ல என்று அவரே சிம்புவிடம் தெரிவித்துவிட்டார். எனவே குடும்பத்தில் நீங்கள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். 

கே: ரஜினி, கமல், விஜயகாந்த்தை சென்று சந்தித்தீர்கள். முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவீர்களா?

நாசர்: முதல்வர் ஜெயலலிதா 8 கோடி மக்களின் முதல்வர். அவர் வாக்களிக்க வந்தால் அதைவிட எங்களுக்கு பெருமை வேறு எதுவும் இல்லை.


Post your comment





Related News
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
நல்ல கதை அமைந்தால் சரத்குமாருடன் நடிக்க தயார் : விஷால் பேட்டி
நடிகர் சங்கத்தின் அடுக்குமாடி சொத்தின் நிலை என்ன?
இனி ஒரே அணியாக செயல்படுவோம்: நடிகர் விஷால் பேட்டி
பாண்டவர் அணியின் வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்தது இதுவே!
விஷால் அணியில் 25 பேர், சரத்குமார் அணியில் 4 பேர் வெற்றி
வழக்கு போட்டதற்கு விஷால் கொடுத்த பதிலடி..!
தேர்தலில் வெற்றி பெற்றால் தினமும் நிறை-குறைகளை கலைந்து எடுப்போம்: விஷால் உறுதி
நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு விஷால் அணி கமிஷனரிடம் மனு
தேர்தல் எதிரொலி : நாடக நடிகர்கள் 934 பேர் தபால் ஓட்டுப்போட முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions