நடிகர் சங்க தேர்தல் நெருங்கும் வேளையில் விஷாலுக்கு கொலை மிரட்டல்!

Bookmark and Share

நடிகர் சங்க தேர்தல் நெருங்கும் வேளையில் விஷாலுக்கு கொலை மிரட்டல்!

எதிர்வரும் 18 ஆம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்காக 2 அணிகளை சேர்ந்தவர்களும் தேர்தலில் வெற்றி பெற தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சரத்குமார் எழும்பூர் நீதிமன்றில் விஷால் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையே நடிகர் விஷாலுக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் வசித்து வரும் விஷால் இதுபற்றி அண்ணாநகர் போலீஸார் முறைப்பாடு செய்துள்ளார்.

அதில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் எனக்கு தேவையில்லாத எண்களில் இருந்து போன் செய்து பேசும் சிலர் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே எனது வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அண்ணா நகரில் உள்ள விஷாலின் வீடு மற்றும் அலுவலகம் அருகில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்தெந்த எண்களில் இருந்து மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளது என்பது பற்றிய விபரங்களையும் விஷால் போலிஸாரிடம் தெரிவித்துள்ளார். விஷாலுக்கு மிரட்டல் விடுத்தவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Post your comment





Related News
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
நல்ல கதை அமைந்தால் சரத்குமாருடன் நடிக்க தயார் : விஷால் பேட்டி
நடிகர் சங்கத்தின் அடுக்குமாடி சொத்தின் நிலை என்ன?
இனி ஒரே அணியாக செயல்படுவோம்: நடிகர் விஷால் பேட்டி
பாண்டவர் அணியின் வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்தது இதுவே!
விஷால் அணியில் 25 பேர், சரத்குமார் அணியில் 4 பேர் வெற்றி
வழக்கு போட்டதற்கு விஷால் கொடுத்த பதிலடி..!
தேர்தலில் வெற்றி பெற்றால் தினமும் நிறை-குறைகளை கலைந்து எடுப்போம்: விஷால் உறுதி
நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு விஷால் அணி கமிஷனரிடம் மனு
தேர்தல் எதிரொலி : நாடக நடிகர்கள் 934 பேர் தபால் ஓட்டுப்போட முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions