நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு விஷால் அணி கமிஷனரிடம் மனு

Bookmark and Share

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு விஷால் அணி கமிஷனரிடம் மனு

விஷால் அணியினர் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து நடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.

தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷால் மற்றும் கார்த்தி, பொன்வண்ணன், எஸ்.வி.சேகர், பூச்சி முருகன் ஆகியோர் காலை 11 மணியளவில் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர்.

போலீஸ் கமிஷனரை சந்திக்க இருப்பது குறித்து நடிகர் விஷால் கூறியதாவது:– நடிகர் சங்க தேர்தல் அன்று நடிகர் சங்க உறுப்பினர்கள், முன்னணி நடிகர்–நடிகைகள் வருகை தருவார்கள். எனவே அன்றைய தினம் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு கொடுக்க வந்துள்ளோம் என கூறினார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions