பாண்டவர் அணியின் வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்தது இதுவே!

Bookmark and Share

பாண்டவர் அணியின் வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்தது இதுவே!

சரத்குமார் அணியின் வாய்ப்பேச்சுக்கள் தான் பாண்டவர் அணி வெற்றி பெற காரணமாக அமைந்துவிட்டது. அக்டோபர் 7ம் தேதியன்று சரத்குமார் அணி சார்பில் திடீரென ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய ராதிகா, விஷாலை ‘விஷால் ரெட்டி’ என்று சாதிப்பெயரைக் கொண்டு குறிப்பிட ஆரம்பித்தார். விஷால் தமிழரல்ல என்று அடையாளப்படுத்தவே அந்த சந்திப்பு நடைபெற்றதோ என்ற கேள்வியும் அப்போது எழுந்தது.

அடுத்து பேசிய சிம்பு, விஷாலையும் அவரது அணியினரையும் தரக்குறைவாக பேச ஆரம்பித்தார். அவருடைய பேச்சில் எந்த அர்த்தமோ குறிப்பிடத்தக்க விஷயங்களோ இல்லாமல் ஏதோ வாய்க்கு வந்தபடியான பேச்சாகவே இருந்தது. அதோடு அன்று பத்திரிகையாளர்களிடமும் சண்டைக்கு வந்தார் சிம்பு.

நடிகர் சங்கத் தேர்தல் சம்பந்தமான ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசுவதற்கு கைதட்டுவதற்காக அவருடைய ரசிகர்கள் பலரை அழைத்து வந்திருந்தார். சிம்பு எதைப் பேசினாலும் அவர்கள் கைதட்டிக் கொண்டே இருந்தனர். இப்படி அனைத்துமே ஒரு நாடகமாக அமைந்த அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்புதான் பாண்டவர் அணிக்கு ஒரு பக்கபலமான திருப்புமுனையைத் தந்துள்ளது.

ராதிகா, சிம்பு ஆகியோரின் பேச்சைக் கேட்ட மற்ற நடிகர், நடிகைகளும் பாண்டவர் அணி பக்கம் திரும்பினார்கள். கடைசியாக தேர்தல் நடைபெறுவதற்கு முந்தின தினம் சரத் அணி சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் நடிக்கவே வராத இயக்குனரான சேரன், விஷால், கார்த்தி ஆகியோர் முதலில் நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று பேசினார்.

இவையனைத்தும் சேர்ந்து தான் நடுநிலை வகித்த நடிகர், நடிகைகளைக் கூட பாண்டவர் அணி பக்கம் முழுமையாக திரும்ப வைத்தது என்பது தான் பெரும்பாலான நடிகர்களின் கருத்தாக உள்ளது.


Post your comment





Related News
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
நல்ல கதை அமைந்தால் சரத்குமாருடன் நடிக்க தயார் : விஷால் பேட்டி
நடிகர் சங்கத்தின் அடுக்குமாடி சொத்தின் நிலை என்ன?
இனி ஒரே அணியாக செயல்படுவோம்: நடிகர் விஷால் பேட்டி
விஷால் அணியில் 25 பேர், சரத்குமார் அணியில் 4 பேர் வெற்றி
வழக்கு போட்டதற்கு விஷால் கொடுத்த பதிலடி..!
தேர்தலில் வெற்றி பெற்றால் தினமும் நிறை-குறைகளை கலைந்து எடுப்போம்: விஷால் உறுதி
நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு விஷால் அணி கமிஷனரிடம் மனு
தேர்தல் எதிரொலி : நாடக நடிகர்கள் 934 பேர் தபால் ஓட்டுப்போட முடிவு
நடிகர் சங்க தேர்தல் நெருங்கும் வேளையில் விஷாலுக்கு கொலை மிரட்டல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions