விஷால் அணியில் 25 பேர், சரத்குமார் அணியில் 4 பேர் வெற்றி

Bookmark and Share

விஷால் அணியில் 25 பேர், சரத்குமார் அணியில் 4 பேர் வெற்றி

சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

ஆரம்பம் முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 5 மணிக்கு வாக்கு பதிவு முடிந்ததும், 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதலில் தபால் ஓட்டுக்களும், பின்னர் நேரில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.

முடிவில், நாசர் தலைமையிலான பாண்டவர் அணி, தலைவர் பதவி, பொதுச்செயலாளர் பதவி, துணைத் தலைவர் பதவி, பொருளாளர் பதவி உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் வெற்றி பெற்றது. மொத்தம் 29 நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று அதிகாலை 4 மணியளவில்தான் முழுமையாக முடிவடைந்துள்ளது. 

இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இறுதி நிலவரப்படி, தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 2 துணைத் தலைவர்கள், 20 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 25 பேர் விஷால் அணியை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். சரத்குமார் அணியை சேர்ந்த 4 பேர் மட்டும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். 

24 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட விஷால் அணியினரில் நந்தா, விக்னேஷ், கோவை சரளா, குட்டி பத்மினி உள்ளிட்ட 20 பேர் வெற்றி பெற்றனர். சரத்குமார் அணியினரில் ராம்கி, நிரோஷா, நளினி, டி.பி.கஜேந்திரன் ஆகிய நான்கு பேர் மட்டும் வெற்றி பெற்றனர்.


Post your comment





Related News
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
நல்ல கதை அமைந்தால் சரத்குமாருடன் நடிக்க தயார் : விஷால் பேட்டி
நடிகர் சங்கத்தின் அடுக்குமாடி சொத்தின் நிலை என்ன?
இனி ஒரே அணியாக செயல்படுவோம்: நடிகர் விஷால் பேட்டி
பாண்டவர் அணியின் வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்தது இதுவே!
வழக்கு போட்டதற்கு விஷால் கொடுத்த பதிலடி..!
தேர்தலில் வெற்றி பெற்றால் தினமும் நிறை-குறைகளை கலைந்து எடுப்போம்: விஷால் உறுதி
நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு விஷால் அணி கமிஷனரிடம் மனு
தேர்தல் எதிரொலி : நாடக நடிகர்கள் 934 பேர் தபால் ஓட்டுப்போட முடிவு
நடிகர் சங்க தேர்தல் நெருங்கும் வேளையில் விஷாலுக்கு கொலை மிரட்டல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions