இது நம்ம ஆளு தள்ளிப்போக விஷால் காரணமா?

Bookmark and Share

இது நம்ம ஆளு தள்ளிப்போக விஷால் காரணமா?

சிம்பு-நயன்தாரா நடிப்பில் உருவான இது நம்ம ஆளு திரைப்படத்தை அடுத்த வருடம் காதலர் தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று உறுதியான தகவல்கள் வெளியான நிலையில் தற்போது படம் காதலர் தினத்திற்கு தள்ளிப் போயிருக்கிறது.

இந்நிலையில் சிம்புவின் இது நம்ம ஆளு மீண்டும் தள்ளிப்போக விஷாலின் கதகளி திரைப்படமும் ஒரு காரணமாகி இருக்கிறது. இது நம்ம ஆளு சிம்பு, நயன்தாரா, சூரி, ஆண்ட்ரியா மற்றும் சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இது நம்ம ஆளு. சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு குறளரசன் இசையமைக்க சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தயாரித்து இருக்கிறார்.

பலமுறை

பலமுறை ரிலீஸ் தேதியை அறிவித்தும் படத்தை வெளியிட முடியவில்லை. மேலும் படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் சிம்பு குடும்பத்தினரிடையே இந்தப் படத்தினால் மோதல்களும் எழுந்தன.இந்நிலையில் படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர்.ஆனால் மீண்டும் ஒருமுறை இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கிறது.

காதலர் தினம்

தற்போது காதலர் தினத்தில் இப்படத்தை வெளியிட படத்தை வாங்கியிருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது இதனைப் படத்தின் இயக்குநர் பாண்டிராஜும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.

காரணம் என்ன

ஏற்கனவே சுந்தர்.சியின் அரண்மனை 2 மற்றும் விஷாலின் கதகளி ஆகிய படங்களின் வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இதனால் இது நம்ம ஆளு படத்தை பொங்கல் தினத்தில் வெளியிடும் பட்சத்தில் இந்நிறுவனத்தின் 3 படங்கள் ஒரே நாளில் வெளியாகும். இதனை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் விரும்பவில்லை எனவே இது நம்ம ஆளு படத்தை காதலர் தினத்தில் வெளியிட இந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

விரைவில் பாடல்கள்

இது நம்ம ஆளு படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன. படத்தின் மற்ற பணிகள் மற்றும் பாடல் படப்பிடிப்பை விரைவில் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகவிருக்கிறது.


Post your comment





Related News
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
இறைவன் தன்னுடைய சக்தியை காட்டி விட்டார் : சிம்பு நெகிழ்ச்சி!
25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு!
உடல் எடை கூடியதற்கு காரணம் சொல்கிறார் சிம்பு!
தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 7 புதிய படங்கள் இன்று ரிலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions