மருது டீசர், டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

மருது டீசர், டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

குட்டிப்புலி, கொம்பன் புகழ் முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீ திவ்யா, ராதா ரவி நடித்திருக்கும் படம் மருது. சமீபத்தில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்தது. இதைதொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படம் வரும் மே மாதம் திரைக்கு வந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ஐங்கரன் நிறுவனத்துடன் சேலத்தை சேர்ந்த 7ஜி சிவா மற்றும் அசோக் சாம்ராஜ் ஆகியோர் இந்த படத்தை கூட்டாக தமிழகம் முழுவதும் வெளியிடுகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வரும் ஏப்ரல் 8-ம் தேதி தெலுங்கு புத்தாண்டிலும் மேலும் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டிலும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions