விஷால் மன்னிப்பு கேட்டது ஏன்?

Bookmark and Share

விஷால் மன்னிப்பு கேட்டது ஏன்?

நடிகர் சங்க வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்திலும் எதிர்ப்பை காட்டி வந்த விஷால் தற்போது முதன்முறையாக மன்னிப்பு கேட்டுள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன் பின்னணியில் நடந்தது இதுதான் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராக விஷால் போட்டியிட்டபோது அவரது அணிக்கு எதிராக சரத்குமாரை ஆதரித்து அறிக்கை வெளியிட்டது தயாரிப்பாளர் சங்கம்.

விஷால் வெற்றி பெற்றதும் இந்த கோபத்தை மனதில் வைத்து "தயாரிப்பாளர் சங்கம் திருட்டு விசிடி விஷயத்தில் மெத்தனம் காட்டுகிறது. யாருக்கும் அக்கறை இல்லை. சும்மா கூடி பேசி போண்டா, பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு டீ குடித்து விட்டு போகிறார்கள்" என்று பேட்டியளித்தார்.

இதனால் தயாரிப்பாளர் சங்கம் விஷாலை சங்கதிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து விட்டது. தேர்தலில் அவர் பங்கெடுப்பதை தடுக்கவே இந்த நீக்கம். இதை எதிர்த்து விஷால் நீதிமன்றம் சென்றார். வழக்கின் தீர்ப்பு விஷாலுக்கு சாதமாகத்தான் இருக்கும் என்பது சட்ட நிபுணர்களின் கருத்து. காரணம் சங்கத்தை பற்றி விமர்சிக்க சங்கத்தில் உள்ளவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் சாதமான தீர்ப்பு கிடைக்க சில காலம் பிடிக்கும். அதுவரை தற்காலிக நீக்கம் அமுலில் இருக்கும்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் ஒரு தப்பு கணக்கு போட்டது. விஷால் கோபக்காரர், மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டார் என்று நினைத்து நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது "விஷால் வருத்தம் தெரிவித்தால் நீக்கம் குறித்து மறுபரிசீலனை செய்வதாக" கூறியது. நீதிமன்றமும் விஷால் தரப்பு கருத்தைக் கேட்டது.

விஷாலுக்கு மூத்த தயாரிப்பாளர்கள் சிலர் மன்னிப்பு கேட்பதால் இமேஜ் பாதிக்கப்படாது. தடை விலகி பதவிக்கு வர முயற்சி செய்யுங்கள் என்று கூறியதும் ஏற்றுக்கொண்டு நேற்று நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்து மனு கொடுக்கப்பட்டது. நீதிமன்றமும் தயாரிப்பாளர் சங்கத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

இதை எதிர்பார்க்காத தயாரிப்பாளர் சங்க தரப்புக்கு தடையை நீக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions