ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்

Bookmark and Share

ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்

தெலுங்கு திரைப்பட உலகையே பரபரப்பில் வைத்து இருப்பவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஒவ்வொரு நடிகராக பெயரை குறிப்பிட்டு புகார் கூறி வருகிறார். இந்த வாரம் ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டில் சிக்கியவர் நானி.

தெலுங்கு நடிகரான நானி தமிழில் நான் ஈ, வெப்பம் படங்களில் நடித்தவர். நானி மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டை வைத்து வருகிறார் ஸ்ரீ ரெட்டி. இரும்புத்திரை படத்தின் தெலுங்கு பதிப்பான அபிமன்யுடு வெற்றி சந்திப்பில் கலந்துகொண்ட விஷாலிடம் இதுபற்றி கேட்டனர். 

அதற்கு விஷால் ‘இன்றைய சூழலில் யார் வேண்டுமானாலும் சினிமா கம்பெனி என்ற பெயரில் ஒரு அலுவலகத்தை அமைத்து நடிக்க வைக்கிறேன் என்று நடிகைகளை தவறாக பயன்படுத்தலாம் என்ற நிலை இருக்கிறது. நானியை எனக்கு நன்றாக தெரியும். நானி மீது ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டு கூறி இருப்பது மிக கொடூரமானது.

இப்போது நானியின் பெயரை கூறுபவர் அடுத்து வேறு ஒரு பெயரை கூறுவார். ஸ்ரீ ரெட்டி இந்த பெயர் விளையாட்டை நிறுத்திவிட்டு தன்னிடம் ஆதாரங்கள் இருந்தால் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்ய வேண்டும்’ என்று கூறி உள்ளார்.


Post your comment





Related News
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்
பண முதலைகளுக்கு வங்கி கடன், இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்.!
படத்தை பார்க்காமலேயே வழக்கு போடுவதா? இரும்புத்திரை இயக்குனர் விளக்கம்
குழந்தை பெற்றாலும் தொடர்ந்து நடிப்பேன் - சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions