சங்க கட்டிடம் கட்டும் வரை ஓயமாட்டேன்: விஷால் அதிரடி

Bookmark and Share

சங்க கட்டிடம் கட்டும் வரை ஓயமாட்டேன்: விஷால் அதிரடி

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் மற்றும் அவரது அணியை சேர்ந்த பொன்வண்ணன், குட்டி பத்மினி, சங்கீதா, பூச்சி முருகன், எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன்கள் இளங்கோவன், கலைவாணன், ராஜேந்திரகுமார், செல்வராஜ், ரவிக்குமார், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உருவ பட திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எஸ்.எஸ்.ராஜேந்திரனின் உருவபடத்தை ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் திறந்து வைத்தார். விழாவில் நடிகர் விஷால் பேசியதாவது:- 
மூத்த நடிகைகள் விஜயகுமாரி, ஷீலா போன்றோரை இன்று பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மூத்த நடிகர்-நடிகைகள் இளம் நடிகர்களுக்கு பாடமாக இருக்கிறார்கள். அவர்களுடைய அனுபவங்கள் புதிதாக வரும் நடிகர்-நடிகைகளுக்கு தேவை. திரைப்பட விழாக்கள், கலை நிகழ்ச்சிகளில் இளம் நடிகர்களை பார்க்க முடிகிறது. மூத்த நடிகர்களை காண முடிவதில்லை. 

அவர்களின் பாதை, முன்னேறிய தன்மை போன்றவைகள் எங்களுக்கும் தெரியவேண்டும். அவர்கள் வழிகாட்ட வேண்டும். அவர்கள் அனுபவங்களை பெற இன்றைய தலைமுறை தவறிவிட்டது. அதற்காகத்தான் போராடுகிறோம். ‘சத்யஜித்ரே படம் போல டைரக்டர் பாலா படம் இருக்கிறது’, என்று ஆர்யாவிடம் நான் சொன்னேன். அதற்கு அவன் ‘சத்யஜித்ரே யார்?’ என்று கேட்டான். நடிகை அம்பிகாவுடன் நடித்துக்கொண்டிருக்கும் போது, இந்த நடிகை புதுமுகமா? என்று கேட்டான்.

நான் அவனிடம், ‘வெளியே இப்படி பேசாதே, கலவரம் ஆகிவிடும்’, என்று சொல்லி அம்பிகா நடித்த பழைய படங்களை போட்டு காண்பித்தேன். அதை பார்த்ததும் ‘அடேயப்பா! 10 அசினுக்கு சமம் டா’ என்றான். இப்படி மூத்த நடிகர்-நடிகைகளை இளம் நடிகர்-நடிகைகளுக்கு தெரியவில்லை. அந்த நிலைமை மாறவேண்டும். நடிகர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று நினைப்பது தவறு. தினம் தினம் செத்து செத்து பிழைக்கிறார்கள். 

சினிமாவில் போட்டி இருக்கிறது. வெள்ளிக்கிழமை தோறும் புதுமுகங்கள் வருகிறார்கள். நடிகர் சங்க பிரச்சினையில் ஏன் இப்படி சாமியாட்டம் போடுகிறான்? என்று என்னை பலர் நினைக்கின்றனர். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர். போன்றவர்களின் ஆன்மாக்கள் எங்களை வழிநடத்துகின்றன.

நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டும் வரை ஓயமாட்டோம். அந்த கட்டிடத்தை கட்டி மூத்த நடிகர்களை அங்கு அழைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

 

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions