நிஜ ரௌடி உடன் நடிக்கும் விஷால்

Bookmark and Share

நிஜ ரௌடி உடன் நடிக்கும் விஷால்

ஒரு படம் வெற்றியடைந்தால் அதே காம்போ உடன்  மீண்டும் படம் எடுப்பது ஒருவகை வியாபார தந்திரம். சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த 'பாண்டியநாடு' படம் வெற்றியடைந்தது.

அப்படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சுசீந்திரன் இயக்கத்தில் 'பாயும் புலி' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷால். இப்படத்தில் முதல்முறையாக விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

பல வருடங்களுக்கு முன் ரஜினியை வைத்து ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படம் தான் பாயும்புலி. தற்போது அந்தத்தலைப்புக்கான உரிமை ஏவிஎம் பாலசுப்பரிமணியத்திடம் உள்ளது.

எனவே அவரிடம் தடையில்லா சான்றும்  அனுமதியும் வாங்கித்தான் பாயும் புலி என்ற டைட்டிலை  தனது படத்திற்கு சூட்டியிருக்கிறாராம் விஷால். இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்டம் தொடங்கி விட்டது.

பாயும்புலி  படம் குறித்து நடிகர் விஷாலிடம் கேட்டபோது... பாயும்புலி தலைப்புக்கு ஒரு பலம் இருக்கிறது. அதற்காகவே வாங்கினோம். காஜல் அகர்வாலுடன் எனக்கு முதல் படம்.

இயக்குநர் சுசீந்திரனுடன் 2வது படம். மதுரையை பின்னணியாகக் கொண்ட கதை. இதுவும் ஒரு போலீஸ் கதைதான். ஆனால் வழக்கமாக இருக்காது. எப்போதும் சுசீந்திரன் நடுத்தர வர்க்கம் பற்றி பேசுபவர், சிந்திப்பவர்.

அது எனக்குப் பிடிக்கும். இந்தப்படமும் நடுத்தர வர்க்கம் பற்றிய கதைதான். இசை இமான். மதுரை பின்னணியில் பாண்டியநாடு படம் பார்த்து இருக்கிறார்கள். இதையும் பார்க்கப் போகிறார்கள்.

நிஜ சம்பவங்களும் நிஜமுகங்களும் பார்க்கலாம். படத்தில் ஒரு நிஜ ரவுடியும் நடிக்கிறார்.” என்றார். பாயும்புலி படத்தை செப்டம்பர் 17ல் விநாயகர் சதுர்த்திக்கு வெளியிட உள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions