சுசீந்திரன் கிளைமாக்சில் நடிப்பது கடினம் - விஷால்

Bookmark and Share

சுசீந்திரன் கிளைமாக்சில் நடிப்பது கடினம் - விஷால்

பாண்டிய நாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன் - விஷால் மீண்டும் இணைந்துள்ள படம் பாயும் புலி. இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விஷால் ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளார்கள். அதில் விஷால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டு நடித்துள்ளார்கள். 


அது பற்றி விஷால் கூறியிருப்பதாவது, “சுசீந்திரனின் படங்களில் கிளைமாக்சில் நடிப்பது ஒரு நடிகனாக எனக்கு மிகவும் கடினமாக இருக்கும் ஒரு விஷயம். பாயும் புலி படத்தின் கிளைமாக்சில் நடிப்பது பயமாகவும், ஆர்வமாகவும் உள்ளது.

என்னால் முடிந்த அளவிற்கு அந்தக் காட்சியில் நடிப்பேன். விடிய விடிய இந்தக் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து வருகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


பாண்டிய நாடு படத்திலும் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. அந்தக் காட்சியும் இரவு நேரத்தில்தான் படத்தில் இருந்தது,

அதே போல பாயும் புலி படத்தின் கிளைமாக்சையும் இரவு நேரக் காட்சியாகத்தான் வைத்துள்ளார்கள் போலிருக்கிறது. விரைவில் இந்தப் படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions