விஷால்-சுசீந்திரன் இணையும் படத்துக்கு தலைப்பு ரெடியானது

Bookmark and Share

விஷால்-சுசீந்திரன் இணையும் படத்துக்கு தலைப்பு ரெடியானது

விஷால்-சுசீந்திரன் கூட்டணி மீண்டும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு தலைப்பு வைக்காமலேயே படப்பிடிப்பு நடந்து வந்தநிலையில், தற்போது ‘காவல் கோட்டம்’ என்ற தலைப்பை வைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக விஷால் நடிக்கிறாராம்.

சமுத்திரகனி விஷாலின் அண்ணனாக நடிக்கிறார். மேலும், பெங்களூரைச் சேர்ந்த ஒரு புதுமுக நடிகர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்த வருடத்தில் இப்படத்தை வெளியிட மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.

ஏற்கெனவே, விஷால்-சுசீந்திரன் கூட்டணியில் வெளிவந்த பாண்டியநாடு படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் இந்த படமும் இடம்பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions