“நான் பொண்ணா…பிறந்தா…த்ரிஷாவாதான் பிறப்பேன்…”விஷால் வெளிப்படை…

Bookmark and Share

“நான் பொண்ணா…பிறந்தா…த்ரிஷாவாதான் பிறப்பேன்…”விஷால் வெளிப்படை…

விஷால், தமன்னா, வடிவேலு, சூரி நடித்துள்ள கத்திச்சண்டை இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. அதற்காக பல ப்ரோமோஷன்களில் ஈடுபட்ட விஷால், டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அஜித், விஜய்க்கும் விஷாலுக்கும் இடையில் மனவருத்தம்.சங்க நிகழ்வுகளில், கிரிக்கெட் நிதி திரட்டில் என்று இருவருமே கலந்துகொள்ளாதது போன்றவற்றினால் விஷால் கடுப்பாக உள்ளார் என்று சொல்லப்பட்டது.

ஆனால், இன்று அஜித் பற்றி கேட்டபோது…”அவர் நல்ல நண்பர். அவருடன் படம் பண்ண ஆசை” என்றார்.

விஜய் பற்றிய கேள்விக்கு,”விஜக்கு வில்லனாக நடிக்க ஆசை.அவர் நடித்த படத்தில் பூவே உனக்காக ரொம்ப பிடிக்கும்.” என்று சொன்னார்.
த்ரிஷா பற்றி பேசும்போது,’நான் பெண்ணாக பிறக்கணும்ன்னா… த்ரிஷாவாதான் பிறப்பேன்.தன் வாழ்க்கையை அருமையாக வாழ தெரிந்தவர்.” என்று சொன்னார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions