விஷால் வரலட்சுமி உறவு தொடர்கிறதா?

Bookmark and Share

விஷால் வரலட்சுமி உறவு தொடர்கிறதா?

விஷால் வரலட்சுமி உறவு தொடர்கிறதா? நடிகர் விஷால் உடன் எந்நேரமும் அவரது நிழல்போலவே சுற்றிக் கொண்டிருந்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். வரலட்சுமியிடம் பேசும்போதெல்லாம் வரு.. வரு... என்று உருகுவார் விஷால்.

விஷாலும் வரலட்சுமியும் காதலிப்பதாக பல வருடங்களாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இருவரும் அதை மறுத்து வருகின்றனர். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சங்க கட்டிடம் விவகாரம் சூடு பிடித்து, சரத்குமாருக்கு எதிராக நடிகர் சங்க தேர்தலில் விஷால் களத்தில் இறங்குவதாக அறிவித்தார். தன் அப்பாவுக்கும் விஷாலுக்கும் நடக்கும் இந்த போட்டியில் வரலட்சுமி யார் பக்கம் என்ற கேள்வி வந்தபோது நான் எப்போதுமே என் அப்பாவின் பக்கம்தான் என்று அறிவித்தார். அதன் பிறகு விஷாலையும், வரலட்சுமியையும் பார்க்கவே முடியவில்லை.

இந்நிலையில் பாயும்புலி படத்தின் சிங்கிள் ட்ராக்கை பாராட்டித்தள்ளி வரலட்சுமி ட்வீட் செய்திருக்கிறார். ஆக..விஷால் வரலட்சுமி உறவு தொடர்கிறது?


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions