மீண்டும் விஜய்யுடன் மோதும் விஷால்!

Bookmark and Share

மீண்டும் விஜய்யுடன் மோதும் விஷால்!

போட்டியில்லாமல் தன் படத்தை ரிலீஸ் பண்ணி வசூலை அள்ள வேண்டும் என்பதுதான் பல ஹீரோக்களின் ஆசை. அப்படித்தான் பல ஹீரோக்கள் வசூல் மன்னர்களாக வாழ்ந்த வருகிறார்கள். இந்த விஷயத்தில் விஷால் விதிவிலக்கு. போட்டியில் குதித்து வெற்றிபெற வேண்டும் என்று எண்ணுகிற தில் பார்ட்டி அவர்.

விஜய், அஜித் என எந்த ஹீரோ நடித்த  படத்துடன் வேண்டுமானாலும் தன்னுடைய படத்தை தைரியமாக ரிலீஸ் செய்வார் விஷால். 2007 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு விஜய்யின் போக்கிரி படம் வெளியானது. அதே சமயத்தில், தன் படம் தாமிரபரணியை வெளியிட வைத்தார் விஷால்.  

பிறகு, 2014 ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய்யின் கத்தி படம் வெளியானது. அதே அக்டோபர் 22ஆம் தேதிதான் விஷாலின் பூஜை படமும் வெளியானது.  இப்போது மீண்டும் விஜய் படத்துடன் தன் படத்தை தன்னுடைய படத்தை வெளியிட இருக்கிறார் விஷால்.கதகளி படத்தைத் தொடர்ந்து தற்போது மருது படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

கொம்பன் முத்தையா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகிறது. விஜய்யின் தெறி படமும் இதேநாளில் வெளியாகிறது.


Post your comment





Related News
விஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.!
விஜய்யுடன் போட்டிப்போடுவதே விஷாலுக்கு வேலை- தாணு பதிலடி
விஜய்யுடன் மோதுவதை உறுதிசெய்த விஷால்!
20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த விஷால்!
விஷாலுக்கு வில்லனாக நடிக்கவிருந்த விஜய் சேதுபதி – வெளிவந்த உண்மை!
விஜய் சேதுபதி இயக்குனருடன் இணைந்த விஷால்!
விஷால் படத்தில் இணைந்த விஜய் வில்லன்!
தேர்தலில் ஆதரவுகோரி விஜயை சந்திக்க விஷால் மறுப்பு
புலி விஜய்யுடன் மோத விரும்பாத பாயும்புலி விஷால்!
சங்கரை விட விஜய்க்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions