தேர்தலில் ஆதரவுகோரி விஜயை சந்திக்க விஷால் மறுப்பு

Bookmark and Share

தேர்தலில் ஆதரவுகோரி விஜயை சந்திக்க விஷால் மறுப்பு

நடிகர் சங்க தேர்தலில் தங்கள் அணிக்கு ஆதரவுக் கோரி விஜய்யிடம் செல்ல விஷால் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது; ஆனால், இந்த தகவலை விஷால் அணியினர் மறுக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை சந்தித்து, நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணியினர் தங்கள் அணிக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அப்போதே, நடிகர் விஜயையும் சந்திக்க திட்டமிட்டு நடிகர் நாசர், விஜய்யிடம் பேசியுள்ளார் புதிய படவேலைக்காக கிழக்கு கடற்கரை சாலையில் இருப்பதாகவும், வாருங்கள் பேசலாம் என விஜய் கூறியிருக்கிறார். விஜயை சந்திக்க, நாசர் மற்றும் கார்த்தி ஆகிய இருவர் மட்டுமே சென்றுஉள்ளனர்; விஷால் செல்லவில்லை.

விஜய் நடித்த, கத்தி பட ரிலீசின் போது, விஷாலின், பூஜை படம் வெளியானதில் விஷால் மீது விஜய்க்கு அதிருப்தி ஏற்பட்டது. விஜயின் புலி பாடல் வெளியீடு அன்றே, விஷாலின் பாயும் புலி படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.

புலி படம் வெளியாகும் அன்றே, பாயும் புலி படத்தையும் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், விஜயை எப்படி சந்திப்பது என்ற தர்மசங்கடத்தில் தான், விஷால் செல்லவில்லை என, கோலிவுட்டில் ஒரு கருத்து நிலவுகிறது.

இது பற்றி விஷாலிடமிருந்து நேரடியான பதில் கிடைக்காமல் போக, அவருக்கு நெருக்கமான நடிகர்கள் சிலரோ விஜயை சந்திக்க, விஷால் மறுத்தார் என்பது தவறு.

விஜயின் அனுமதி கிடைத்த அன்று பாயும் புலி படத்தின் டப்பிங்கில் இருந்த்தால் “நான் இன்னொரு நாளில் சந்திக்கிறேன்; நீங்கள் சென்று வாருங்கள்“,  என நாசர் மற்றும் கார்த்தி ஆகியோரை அனுப்பி வைத்தார் என்றதோடு  விஜய் மற்றும் டி.ராஜேந்தரை சந்திக்க, விஷால் நேரம் கேட்டுள்ளார்; விரைவில் சந்திப்பார், என்றும் கூறினர்.


Post your comment





Related News
விஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.!
விஜய்யுடன் போட்டிப்போடுவதே விஷாலுக்கு வேலை- தாணு பதிலடி
விஜய்யுடன் மோதுவதை உறுதிசெய்த விஷால்!
20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த விஷால்!
விஷாலுக்கு வில்லனாக நடிக்கவிருந்த விஜய் சேதுபதி – வெளிவந்த உண்மை!
விஜய் சேதுபதி இயக்குனருடன் இணைந்த விஷால்!
விஷால் படத்தில் இணைந்த விஜய் வில்லன்!
மீண்டும் விஜய்யுடன் மோதும் விஷால்!
புலி விஜய்யுடன் மோத விரும்பாத பாயும்புலி விஷால்!
சங்கரை விட விஜய்க்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions