விஜய்யுடன் மோதுவதை உறுதிசெய்த விஷால்!

Bookmark and Share

விஜய்யுடன் மோதுவதை உறுதிசெய்த விஷால்!

சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கியிருக்கும் கத்தி சண்டை படத்தில் விஷால் ஹீரோவாகவும் தமன்னா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். நந்தகோபால் இப்படத்தை மாபெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் காமெடியனாக நடித்துள்ளார்.

எனவே இப்படம் மீது ஓரளவுக்கு எதிர்பார்ப்பு உள்ளது.முதலில் இப்படம் நவம்பர் இறுதியில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் கரன்ஸி பிரச்சனையால் பின்னர் இப்படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது வந்த அதிகாரப்பூர்வ தகவலின்படி இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலில்தான் வெளியாகுமாம்.இதை ட்விட்டரில் விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதேநாளில்தான் விஜய்யின் பைரவா படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் விஷாலுக்கு விஜய்யுடன் மோதுவது எல்லாம் புது விஷயமில்லை. ஏற்கனவே போக்கிரி, கத்தி படங்களுடன் இவர் தனது படங்களை வெளியிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
விஜய்யுடன் போட்டிப்போடுவதே விஷாலுக்கு வேலை- தாணு பதிலடி
20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த விஷால்!
விஷாலுக்கு வில்லனாக நடிக்கவிருந்த விஜய் சேதுபதி – வெளிவந்த உண்மை!
விஜய் சேதுபதி இயக்குனருடன் இணைந்த விஷால்!
விஷால் படத்தில் இணைந்த விஜய் வில்லன்!
மீண்டும் விஜய்யுடன் மோதும் விஷால்!
தேர்தலில் ஆதரவுகோரி விஜயை சந்திக்க விஷால் மறுப்பு
புலி விஜய்யுடன் மோத விரும்பாத பாயும்புலி விஷால்!
சங்கரை விட விஜய்க்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால்
ஜி.வி.பிரகாஷூக்கு சிம்பு, விஷால்,விஜய் கொடுத்த டிப்ஸ் !







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions