நடிகர் சங்க வரவு – செலவு கணக்கை இன்னும் ஒப்படைக்கவில்லை: விஷால் பேட்டி

Bookmark and Share

நடிகர் சங்க வரவு – செலவு கணக்கை  இன்னும் ஒப்படைக்கவில்லை: விஷால் பேட்டி

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்தில் கிராமங்களுக்கும், விவசாய விளைநிலங்களுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டது.

நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் சிதம்பரம் பகுதியில் உள்ள கீழகுண்டலபாடி, ஜெயகொண்டபட்டினம், வடக்குசாலயன்தோப்பு, விளாகம் உள்பட பல கிராமங்களுக்கு சென்று மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். 

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘கனமழையால் சென்னை, கடலூர் உள்பட 5 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவுவதற்காக நடிகர் சங்கம் சார்பில் ‘மக்களுக்காக நாம்’ என்று ஆரம்பித்துள்ளோம். இதன் மூலம் நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நான் தற்போது நடிகனாக இங்கு வரவில்லை. மக்களில் ஒருவனாக வந்துள்ளேன்’ என்றார். 

பின்னர், நடிகர் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகள் ஒப்படைக்கப்பட்டுவிட்டதா? என்ற கேள்விக்கு, விஷால் கூறும்போது ‘இதுவரை நடிகர் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை ஒப்படைக்கவில்லை.

இதுதொடர்பாக நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி, அதன் முடிவுப்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். 

அவருடன் இலங்கை ஆபர் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் பூங்கோதை சந்திரகாசன், ஊராட்சி மன்ற தலைவர்கள், நடிகர் சங்கர் நிர்வாகிகள் இருந்தனர்.


Post your comment

Related News
இந்தி நடிகையால் ஓரம் கட்டப்பட்ட விஷால் பட நாயகி
விஷால் பதவி விலகக்கோரி பட அதிபர்கள் சங்க பொதுக்குழுவில் மோதல்
மாணவ மாணவிகளின் படிப்பிற்காக உதவிய விஷால் - பாராட்டும் ரசிகர்கள்.!
விஜய்யின் மெர்சல் படத்திற்காக விஷால் செய்த காரியம்
விஷாலின் அடுத்த அதிரடியால் அசந்து போன கோலிவுட் - இனி தியேட்டர்ல இப்படி தான்.!
கேளிக்கை வரி பிரச்சினையில் 2 நாளில் நல்ல முடிவு கிடைக்கும்: விஷால் நம்பிக்கை
நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை
விஷால் படத்தை தயாரிக்கிறார் விக்னேஷ்!
எந்த கட்சியையும் சாராதவனாக சேவை செய்ய விரும்புகிறேன்: விஷால் பேட்டி
பின்னணி பாடகி சரளாவுக்கு நடிகர் விஷால் உதவி!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions