விஷால் பதவி விலகக்கோரி பட அதிபர்கள் சங்க பொதுக்குழுவில் மோதல்

Bookmark and Share

விஷால் பதவி விலகக்கோரி பட அதிபர்கள் சங்க பொதுக்குழுவில் மோதல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் ஓய்வுபெற்ற நீதிபதி ராமநாதன் முன்னிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் விஷால் தலைமை தாங்கினார். செயலாளர் கதிரேசன், துணைத்தலைவர் பிரகாஷ்ராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

விஷால் பதவி ஏற்ற பின்பு நடக்கும் முதல் பொதுக்குழு என்பதால் பரபரப்பான எதிர்பார்ப்புடன் தொடங்கியது. மூத்த தயாரிப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். கூட்டம் ஆரம்பித்த உடனேயே மேடையில் நிர்வாகிகள் இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதாக நடிகர் மன்சூர் அலிகான் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

விஷால் பேசத்தொடங்கியதும் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். விஷால் பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன், “தயாரிப்பாளர் சங்கம் அரசை அனுசரித்து செல்ல வேண்டும் என்று சங்கத்தில் விதிமுறைகள் உள்ளன. விஷால் அதனை மீறிவிட்டார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்தது ஆளும் கட்சிக்கு எதிராக எடுத்த நடவடிக்கை. இதனால் அரசிடம் இருந்து திரைப்படங்களுக்கு கிடைக்க வேண்டிய மானியத்தை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. விஷால் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பேசினார்.

அவருக்கு ஆதரவாக எதிர்ப்பு கோஷ்டியினர் விஷால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட்டபடி இருந்தனர். இதனால் விஷால் தொடர்ந்து பேச முடியவில்லை. சங்கத்தின் செயலாளர் கதிரேசன் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்து சங்கத்தின் பொதுக்குழுவின் ஒப்புதலை கேட்டார்.

ஆனால் சிலர் எழுந்து நின்று சங்கத்தின் இருப்பில் இருந்த ரூ.7 கோடியில் முறைகேடு நடந்துள்ளது. ஊழல் நடந்து இருக்கிறது என்று கோஷம் எழுப்பினார்கள். இதனால் கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியவில்லை. கூட்டம் தொடங்கிய 10 நிமிடங்களிலேயே பாதியில் முடிந்துவிட்டது.

டி.ராஜேந்தர், முக்தா சீனிவாசன், ஆர்.பி.சவுத்ரி, தங்கர் பச்சான், சேரன், பி.வி.ராஜேந்திரன், எஸ்.வி.சேகர். அருண் பாண்டியன், திருமலை, சிவசக்தி பாண்டியன், உதயா, ஜே.கே.ரித்திஷ், மன்னன், உள்பட 400-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பொதுக்குழுவில் கலந்து கொண்டனர்.

பொதுக்குழுவில் நடந்த மோதல் குறித்து விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-

“தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் சிலர் என்னை பேசவிடாமல் தடுத்து மைக்கை பிடுங்கினார்கள். தகாத வார்த்தைகளால் பேசினார்கள். அடிக்கவும் வந்தனர். சங்கத்தில் ரூ.7 கோடி முறைகேடு நடந்துள்ளதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளனர். அலுவலகத்துக்கு வந்து பணம் இருக்கிறதா? இல்லையா என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

சங்கத்தில் எந்த தவறும் நடக்கவில்லை. எனவே நாங்கள் ராஜினாமா செய்ய தேவை இல்லை. தொடர்ந்து சங்கத்துக்கு நல்லது செய்வோம். அரசு மானியம் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படாது”

இவ்வாறு விஷால் கூறினார்.


Post your comment





Related News
இந்தி நடிகையால் ஓரம் கட்டப்பட்ட விஷால் பட நாயகி
மாணவ மாணவிகளின் படிப்பிற்காக உதவிய விஷால் - பாராட்டும் ரசிகர்கள்.!
விஜய்யின் மெர்சல் படத்திற்காக விஷால் செய்த காரியம்
விஷாலின் அடுத்த அதிரடியால் அசந்து போன கோலிவுட் - இனி தியேட்டர்ல இப்படி தான்.!
கேளிக்கை வரி பிரச்சினையில் 2 நாளில் நல்ல முடிவு கிடைக்கும்: விஷால் நம்பிக்கை
நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை
விஷால் படத்தை தயாரிக்கிறார் விக்னேஷ்!
எந்த கட்சியையும் சாராதவனாக சேவை செய்ய விரும்புகிறேன்: விஷால் பேட்டி
பின்னணி பாடகி சரளாவுக்கு நடிகர் விஷால் உதவி!
விவசாயியின் கடனை ஏற்று மீண்டும் ரியல் ஹீரோவான விஷால்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions