விஷாலின் கதகளி ரன்னிங் டைம் வெளியானது!

Bookmark and Share

விஷாலின் கதகளி ரன்னிங் டைம் வெளியானது!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்திருக்கும் கதகளி திரைப்படம் இன்னும் இரு தினங்களில் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 5 நிமிடம் என தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இப்படத்தின் இரண்டாம் பகுதியில் பாடல்களே கிடையாதாம். இப்படத்தின் முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஷால் ஜோடியாக முதல்முறையாக கேத்தரின் தெரசா நடித்துள்ளார்.

ஹிப்ஹாப் தமிழா இசையில் வெளியான இப்படத்தின் பாடல்களும் மற்றும் டிரைலர் காட்சிகளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பசங்க 2’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions