கதகளி படத்தின் ரகசியம் சொன்ன விஷால்!

Bookmark and Share

கதகளி படத்தின் ரகசியம் சொன்ன விஷால்!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் கதகளி திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஷால், இப்படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, ” பாண்டிய நாடு படத்துக்குப் பிறகு ஒரு இயக்குனருக்கான படத்தில் நான் நடித்துள்ளேன். இது முழுக்க முழுக்க பாண்டிராஜ் படம். இப்படத்தில் பல சஸ்பென்ஸ்களை எதிர்பாரா இடத்தில் அவர் வைத்துள்ளார்” என்றார்.

இப்படத்தில் விஷால் ஜோடியாக முதல்முறையாக கேத்தரின் தெரசா நடித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையில் வெளியான இப்படத்தின் பாடல்களும் மற்றும் டிரைலர் காட்சிகளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘பசங்க 2’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.


Post your comment





Related News
இந்தி நடிகையால் ஓரம் கட்டப்பட்ட விஷால் பட நாயகி
விஷால் பதவி விலகக்கோரி பட அதிபர்கள் சங்க பொதுக்குழுவில் மோதல்
மாணவ மாணவிகளின் படிப்பிற்காக உதவிய விஷால் - பாராட்டும் ரசிகர்கள்.!
விஜய்யின் மெர்சல் படத்திற்காக விஷால் செய்த காரியம்
விஷாலின் அடுத்த அதிரடியால் அசந்து போன கோலிவுட் - இனி தியேட்டர்ல இப்படி தான்.!
கேளிக்கை வரி பிரச்சினையில் 2 நாளில் நல்ல முடிவு கிடைக்கும்: விஷால் நம்பிக்கை
நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை
விஷால் படத்தை தயாரிக்கிறார் விக்னேஷ்!
எந்த கட்சியையும் சாராதவனாக சேவை செய்ய விரும்புகிறேன்: விஷால் பேட்டி
பின்னணி பாடகி சரளாவுக்கு நடிகர் விஷால் உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions