விஷால் செய்த செயலினை கண்டு கடையடைப்பு செய்த மக்கள்

Bookmark and Share

விஷால் செய்த செயலினை கண்டு கடையடைப்பு செய்த மக்கள்

முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மருது’. இமான் இசையமைத்து வரும் இப்படத்தை அன்புசெழியன் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் கதைக்களம் ராஜபாளையம் என்பதால், அங்கே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக விஷால் ராஜபாளையம் சென்ற போது அங்குள்ள திருட்டு வி.சி.டி கடைகளை எல்லாம் மூடி இருக்கிறார்கள்.

இச்சம்பவம் குறித்து விஷாலிடம் கேட்ட போது, “ராஜபாளையத்தில் ‘மருது’ படப்பிடிப்பில் இருக்கும் போது ஒரு திருட்டு விசிடி கடை கூட இல்லை, மூடிவிட்டார்கள் என்றார்கள். கேபிள் தொலைக்காட்சியில் புதுப்படம் எதுவுமே போடாமல், பழைய பாடல்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு அதில் பெருமையே இல்லை. இதற்காக நான் எத்தனை ஊரில் போய் படப்பிடிப்பு நடத்த முடியும்? அனைத்து நடிகர்களும் சேர்ந்து நடவடிக்கை எடுத்தால் ஒரு பெரிய புரட்சியாக மாறும். அப்போது மட்டுமே எனக்கு பெருமை” என்று தெரிவித்தார்.


Post your comment





Related News
இந்தி நடிகையால் ஓரம் கட்டப்பட்ட விஷால் பட நாயகி
விஷால் பதவி விலகக்கோரி பட அதிபர்கள் சங்க பொதுக்குழுவில் மோதல்
மாணவ மாணவிகளின் படிப்பிற்காக உதவிய விஷால் - பாராட்டும் ரசிகர்கள்.!
விஜய்யின் மெர்சல் படத்திற்காக விஷால் செய்த காரியம்
விஷாலின் அடுத்த அதிரடியால் அசந்து போன கோலிவுட் - இனி தியேட்டர்ல இப்படி தான்.!
கேளிக்கை வரி பிரச்சினையில் 2 நாளில் நல்ல முடிவு கிடைக்கும்: விஷால் நம்பிக்கை
நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை
விஷால் படத்தை தயாரிக்கிறார் விக்னேஷ்!
எந்த கட்சியையும் சாராதவனாக சேவை செய்ய விரும்புகிறேன்: விஷால் பேட்டி
பின்னணி பாடகி சரளாவுக்கு நடிகர் விஷால் உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions