சண்டக்கோழி-2 படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடக்கம்

Bookmark and Share

சண்டக்கோழி-2 படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடக்கம்

விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ‘சண்டக்கோழி’ படம் கடந்த 2005-ம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விஷாலும்-லிங்குசாமியும் ஆர்வமுடன் இருந்தனர். தற்போது அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். 

ஏனென்றால், வருகிற மார்ச் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகளை தொடங்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது. இப்படத்தில் நாயகனாக விஷால் நடிக்கிறார்.

முந்தைய பாகத்தில் நடித்த ராஜ்கிரணும், மீரா ஜாஸ்மினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தில் நடிகர் சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. காமெடிக்கு சதீஷ் நடிக்கிறார்.

விஷாலுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்படத்தை லிங்குசாமியே இயக்கவிருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.


Post your comment





Related News
இந்தி நடிகையால் ஓரம் கட்டப்பட்ட விஷால் பட நாயகி
விஷால் பதவி விலகக்கோரி பட அதிபர்கள் சங்க பொதுக்குழுவில் மோதல்
மாணவ மாணவிகளின் படிப்பிற்காக உதவிய விஷால் - பாராட்டும் ரசிகர்கள்.!
விஜய்யின் மெர்சல் படத்திற்காக விஷால் செய்த காரியம்
விஷாலின் அடுத்த அதிரடியால் அசந்து போன கோலிவுட் - இனி தியேட்டர்ல இப்படி தான்.!
கேளிக்கை வரி பிரச்சினையில் 2 நாளில் நல்ல முடிவு கிடைக்கும்: விஷால் நம்பிக்கை
நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை
விஷால் படத்தை தயாரிக்கிறார் விக்னேஷ்!
எந்த கட்சியையும் சாராதவனாக சேவை செய்ய விரும்புகிறேன்: விஷால் பேட்டி
பின்னணி பாடகி சரளாவுக்கு நடிகர் விஷால் உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions