பின்னணி பாடகி சரளாவுக்கு நடிகர் விஷால் உதவி!

Bookmark and Share

 பின்னணி பாடகி சரளாவுக்கு நடிகர் விஷால் உதவி!

பழம்பெரும் சினிமா பின்னணி பாடகி சரளா. இவர் ‘பேசும் தெய்வம்’ படத்தில் பாடிய ‘நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க’ என்ற பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. மேலும் ஏராளமான படங்களில் பாடி இருக்கிறார்.

எம்.ஆர்.ராதாவின் ரத்தக்கண்ணீர், தூக்குமேடை நாடகங்களிலும் பின்னணி பாடல் பாடி உள்ளார். சரளாவுக்கு 76 வயது ஆகிறது. இவரது கணவர் சுவாமிநாதன் இறந்து விட்டார்.

தற்போது வயதான நிலையில் தனது இரண்டு மகள்களுடன் சென்னை போரூர் அருகே உள்ள கோவூரில் 1,500 ரூபாய் மாத வாடகை கொடுத்து சிறிய வீட்டில் வசித்து வருகிறார். அன்றாட செலவுக்கு பணம் இல்லாமல் வறுமையில் கஷ்டப்படுவதாக அவர் தெரிவித்து இருந்தார்.

இதுபற்றி கேள்வி பட்டதும் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பாடகி சரளாவை தொடர்பு கொண்டு மாதம் தோறும் தனது தேவி அறக்கட்டளை மூலமாக ரூ.5,000 உதவி வழங்குவதாக தெரிவித்தார். இந்த மாதத்துக்கான உதவி தொகையை தனது ரசிகர் மன்ற தலைவர் ஜெயசீலன், செயலாளர் ஹரி ஆகியோர் மூலம் சரளாவிடம் வழங்கினார்.


Post your comment





Related News
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
போராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions