நடிகை விஷாலி கண்ணதாசன் பா.ஜ.கவில் இணைந்தார்

Bookmark and Share

நடிகை விஷாலி கண்ணதாசன் பா.ஜ.கவில் இணைந்தார்

கவியரசன் கண்ணதாசனின் மகள் விசாலி கண்ணதாசன். கே.பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் அவரால் நடிகையாக நிலைத்து நிற்க முடியவில்லை.

அதன் பிறகு கவிதைகள் எழுதினார், சில படங்களுக்கு பாடல்கள் எழுதினார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின்னர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி தனது பெயரை ஜெனிபர் என மாற்றிக் கொண்டு கணவர் மனோகரனுடன் சேர்ந்து கிறிஸ்தவ பிரசங்கம் செய்தார்.

தற்போது விஷாலி கண்ணதாசன் அரசியலில் குதித்துள்ளார். நேற்று (ஏப் 4) தன் கணவர் மனோகரனுடன் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். சென்னை வந்திருந்த அக் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். சிறந்த பேச்சாளரான விஷாலி கண்ணதாசனை கட்சியின் நட்சத்திர பேச்சாளராக்க பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions