விஷ்ணு விஷால் வாய்ப்பை ஆர்யா பறித்தாரா ?

Bookmark and Share

விஷ்ணு விஷால் வாய்ப்பை ஆர்யா பறித்தாரா ?

இன்று நேற்று நாளை படம் வெற்றி பெற்றுவிட்டது என படத் தயாரிப்பு நிறுவனமே இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்தது. அதோடு, விரைவில் இரண்டாம் பாகத்தையும் பிரபல முன்னணி நடிகர் நடிக்க எடுக்க உள்ளோம் என்றும் அறிவித்தார்கள்.

அப்படியென்றால் முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷாலே இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டாரா என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. பொதுவாக ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் முதல் பாகத்தில் நடித்த நாயகனேதான் இரண்டாம் பாகத்திலும் தொடர்வார்.

ஆனால், இன்று நேற்று நாளை படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யாவை இரண்டாம் பாகத்தின் நாயகனாக ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் என்று பேசிக் கொள்கிறார்கள்.

இது சம்பந்தமாக விஷ்ணு விஷாலும் எந்த விதமான வருத்தத்தையும் காட்டிக் கொள்ளவில்லை என்கிறார்கள். விஷ்ணு விஷால், ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள், அவரேதான் ஆர்யாவை, படத் தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்றும் சொல்கிறார்கள். மேலும் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்த  ஜீவா படத்தைக் கூட ஆர்யாவும், விஷாலும் வாங்கி வெளியிட்டுள்ளார்கள்.

அதோடு சி.வி.குமார் தொடர்ந்து விஷ்ணு விஷாலுக்கு தொடர்ந்து அவர் தயாரிக்கும் படங்களில் வாய்ப்பு வழங்கி வருகிறார். அதனால், இன்று நேற்று நாளை இரண்டாம் பாக விவகாரத்தில் எந்தப் பிரச்சனையும் எழ வாய்பேயில்லை என விஷயமறிந்தவர்கள் சொல்கிறார்கள். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.


Post your comment





Related News
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
விஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
ஏன் இப்படி பண்றீங்க? ஓவியாவால் கடுப்பான ஓவியா ஆர்மி - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
விஷ்ணு விஷால் - அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பை கைப்பற்றிய படக்குழு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions